தேர்ந்தெடுக்கும் பாதை சிறந்த பாதையாக வேண்டும் – வி.எல்.பி.  பட்டமளிப்பு விழா கீதாலட்சுமி

வி.எல்.பி. கல்லூரியின் பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது. நிகழ்வைக்  கல்லூரி நிர்வாகத் தலைவர் சூரியகுமார்  துவங்கி வைத்தார்.

சிறப்பு விருந்தினராகக் கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி பங்கேற்றார். அவர் பேசுகையில், மாணவர்கள் படிக்கும் பருவத்திலேயே டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி போன்ற தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும், முடியாது என்பதற்கு எதுவும் இல்லை, நிறையத் தொழில் முனைவோர்கள் உருவாக வேண்டும் என்று அறிவுறுத்தினார். நீங்கள் தேர்ந்தெடுக்கும் பாதை சிறந்த பாதையாக அமைய வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

முன்னதாக கல்லூரி முதல்வர் சதீஷ்குமார் வரவேற்புரை வழங்கியதோடு மாணவர்கள் பெற்ற சாதனைகளையும் கல்லூரியில் நிகழ்ந்த இன்றியமையாத நிகழ்ச்சிகளையும் எடுத்துக் கூறினார்.

இதில் 592 இளங்கலை மாணவர்களும் 32 முதுகலை மாணவர்களும் இடம் பெற்றனர். பல்கலைக்கழகத் தேர்வில், முதல் மூன்று இடங்களைப் பெற்ற 71 மாணவர்களுக்குப் பதக்கங்களும்,  சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.