கே.பி.ஆர். கல்லூரியில் கார்பன்-டை-ஆக்சைடு வெளியேற்றத்தைக் குறைக்க புதுவித முயற்சி

கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் அலுவலர்கள் என அனைவரும் கார்பன்-டை-ஆக்சைடு வெளியேற்றத்தைக் குறைக்க “சுருக்கங்கள் நல்லது” என்ற தலைப்பில் இஸ்திரி செய்யப்படாத ஆடைகளை அணிந்து வந்தனர்.

இந்தப் புதுவித முன்னெடுப்பைக் கல்லூரியின் மின்சார மற்றும் மின்னணுப் பொறியியல் துறை, ஆற்றல் ஸ்வராஜ் அறக்கட்டளையுடன் இணைந்து நடத்தியது.

இதனால் நிலக்கரியைப் பயன்படுத்தித் தயாரிக்கும் மின்சாரத்தின் பயன்பாடு குறைவதால் கார்பன்-டை-ஆக்சைடின் வெளியேற்றம், மின்சாரம், மற்றும் அது தொடர்பான செலவுகள் குறையும் என்றனர்.

இந்த முயற்சி காலநிலை மாற்றத்தை குறைக்க உதவுவதால், இதேபோல் ஒவ்வொரு சனிக்கிழமையும் இஸ்திரி செய்யப்படாத ஆடைகளை அணிவதாக அனைவரும் உறுதிமொழி கூறினர்.