அமிர்தா வேளாண்மை கல்லூரி சார்பில்  மண்புழு உரம் தயாரிப்பு 

அமிர்தா வேளாண்மை கல்லூரியின் மாணவர்கள்  “ ஊரக வேளாண்மை செயல்முறை பயிற்சி அனுபவ திட்டத்தின்” கீழ் மயிலேறிபாளையம் ஊராட்சியைச் சேர்ந்த உள்ளூர் விவசாயிகளுக்கு மண்புழு உரம் பற்றிப் பரிந்துரைத்தனர்.

மண்புழுக்களைப் பயன்படுத்தி உரம் தயாரிக்கும் அறிவியல் முறை மண்புழு உரம் ஆகும். இந்த செயல்முறை மண்ணில் முக்கியமாக ஊட்டச்சத்துக்களைச் சேர்க்க உதவுகிறது. மண்புழு உரம் தாது சத்துக்கள் அளிப்பதோடு மண்ணின் தன்மையும், நீர்ப்பிடிப்பு மற்றும் தாது சத்துக்களின் தன்மையையும் அதிகரிக்கின்றது. மண்புழு தயாரிக்கும்  செயல்முறையை  வேளாண்மை மாணவர்கள் தெளிவாக நடத்திக் காண்பித்தனர்.

நிகழ்வை வெற்றிகரமாக நடத்துவதற்கு அனைத்து ஆதரவையும் கல்லூரியின் முதல்வர் சுதீஷ் மணாலில்  மற்றும் உதவி பேராசிரியர்கள், மார்த்தாண்டன் , பூபதி, வனிதா உள்ளிட்டோர்  வழங்கினார்.