சூரத் நகரில் மொத்த விற்பனைக்கான மையத்தை நிறுவும் கார்மெண்ட் மந்த்ரா லைஃப்ஸ்டைல் லிமிடெட்

கோயம்புத்தூர், பிப். 23: குஜராத்தின் சூரத் மாநகரில் ஒரு புதிய மொத்த விற்பனை (ஹோல்சேல்) மையத்தை கார்மெண்ட் மந்த்ரா குழுமம் நிறுவியிருப்பதை கார்மெண்ட் மந்த்ரா லைஃப்ஸ்டைல் லிமிடெட் மகிழ்வுடன் இன்று அறிவித்திருக்கிறது.  நாட்டின் மேற்கு, வடக்கு மற்றும் மத்திய பிராந்தியத்தைச் சேர்ந்த பெரிய வாடிக்கையாளர்கள் மற்றும் கமிஷன் ஏஜென்ட்களுக்கு இன்னும் கூடுதல் திறனுடன் தனது சேவைகளை வழங்க வேண்டும் என்பதே இப்புதிய மையத்தை தொடங்கியிருப்பதன் நோக்கம் என்று அது குறிப்பிட்டிருக்கிறது.

ராம் ஜென்மபூமி நியாஸ் மற்றும் ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த் ஷேத்ரா, அயோத்யா மற்றும் மதுராவில் அமைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ணா ஜென்மாஸ்தன் சேவா சன்ஸ்தன் ஆகிய அமைப்புகளின் தலைவரான மஹந்த் ஸ்ரீ நிருத்ய கோபால் தாஸ் ஜி மஹராஜ் அவர்களது முன்னிலையில் இம்மையம் தொடங்கப்பட்டிருப்பதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. நம் இந்திய நாட்டின் மேற்கு, வடக்கு மற்றும் மத்திய பிராந்தியத்தைச் சேர்ந்த இத்துறையின் பெரிய வாடிக்கையாளர்கள் கமிஷன் ஏஜென்ட்களுக்கு தனது சேவை சிறப்பாக சென்றடைவதை உறுதிசெய்ய. சூரத் மாநகரில் இயங்கி வரும் கௌரவம் மிக்க பிரபல பிசினஸ் குழுமங்களோடு கார்மெண்ட் மந்த்ரா குழுமம் கைகோர்த்திருக்கிறது.   பல தசாப்தங்களாக ஜவுளி பிசினஸில் ஈடுபட்டு வரும் மற்றும் அதிக எண்ணிக்கையிலான மொத்த விற்பனை நிறுவனங்களை தங்களது வாடிக்கையாளர்களாக கொண்டிருக்கின்ற பிசினஸ் குழுமங்களோடு இணைந்து செயல்படுவதே எமது நோக்கம்.  ஜவுளிகளின் தயாரிப்பு மற்றும் சப்ளை செயின் செயல்பாடுகளில் திறமை என்பது எமது மைய பலங்களாக இருக்கும் நிலையில் எம்முடன் இணைந்திருக்கும் பிற பிசினஸ் குழுமங்கள் விற்பனை மற்றும் சந்தையாக்கல் பணிகளை திறம்பட மேற்கொள்ளும் என்பதால் இந்த ஒத்துழைப்பு உடன்பாடு இருதரப்புகளுக்கும் சிறப்பான ஆதாயமளிப்பதாக இருக்கும்.

கார்மெண்ட் மந்த்ரா லைஃப்ஸ்டைல்ன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு. பிரேம் அகர்வால், இப்புதிய மைல்கல் நிகழ்வு குறித்து பேசுகையில்:

குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் புதிய மொத்த விற்பனை மையத்தை தொடங்கியிருப்பது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்இந்த புதிய சேவை அமைவிடத்தின் மூலம் சிறப்பான மற்றும் பொருளாதார ரீதியில் தேவைகளைப் பூர்த்தி செய்யும் தீர்வுகளைக் கொண்டு இப்பிராந்தியத்தைச் சேர்ந்த அதிக நிறுவனங்களை எமது கூட்டாளிகளாக சேர்த்துக்கொண்டு செயல்படுவது எமது முயற்சியாக இருக்கிறதுஇந்த சிறப்பான அமைவிடம், ஜவுளிகளுக்கு இப்பிராந்தியத்தின் அணுகுவசதியை மேலும் மேம்படுத்தும்அத்துடன் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் வழங்கும் சேவைகளின் தரத்தையும், செயற்பரப்பையும் மேலும் விரிவுபடுத்தும்.

இம்மையமானது, மொத்த விற்பனை வாடிக்கையாளர்களுக்கு மட்டுமின்றி, கமிஷன் ஏஜென்ட்களுக்கும் அதிக பயனளிப்பதாக இருக்கும்.  எமது தயாரிப்புகளின் பின்புல ஆதரவைக் கொண்டு பிசினஸை மேலும் வளர்க்க அவர்களது வாடிக்கையாளர் அடித்தளத்தை அவர்கள் இன்னும் சிறப்பாக பயன்படுத்த முடியும்.  திருப்பூரில் கிடைக்கும் அதே விலையில் அனைத்து தரமான தயாரிப்புகளும் சூரத்திலுள்ள எமது இந்த புதிய மையத்தில் இப்போது கிடைக்கும் என்பதையே மிக குறிப்பாக இங்கு நான் வலியுறுத்தி குறிப்பிட விரும்புகிறேன்.

கடந்த 30 ஆண்டுகளாக, குறைந்த செலவீனத்தில் சிறப்பான உற்பத்தி செயல்பாட்டிற்கான மாதிரியை பின்பற்றுவதில் நாங்கள் நிபுணர்களாக திகழ்கிறோம்.  இப்போது எமது கூட்டாளிகளாக இணைந்திருக்கும் பிசினஸ் குழுமங்கள், பல தசாப்தங்களாக ஜவுளி தயாரிப்புகளை விற்பனை செய்யும் துறையில் முன்னோடிகளாக திகழ்பவை.  இத்துறையில் பிசினஸை அடுத்த உயர்நிலைக்கு எடுத்துச்செல்ல இதுவொரு சிறந்த கூட்டுமுயற்சியாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.  இந்த பிசினஸ் கூட்டுமுயற்சி நடவடிக்கைகள் எங்களுக்கு அதிக நம்பிக்கையைத் தந்திருக்கின்றன.  வருவாய் மற்றும் லாபம் ஆகிய இரு அம்சங்களிலும் இனி வரவிருக்கும் ஆண்டுகள் மிகச்சிறப்பானவையாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்று கூறினார்.