இதயத்துக்கு இதம் அளிக்கும் மாதுளை!

இனி தோலை தூக்கி வீசிடாதீங்க…

பழங்காலத்தில் இருந்தே மக்கள் மாதுளைகளை தங்களது உணவில் சேர்த்து வந்தனர். நிபுணர்களின் கூற்று படி மாதுளையில் தாதுக்கள் நிறைந்துள்ளன மற்றும் ஆக்சிஜன் ஏற்றத்தையும் கொண்டுள்ளது. இருப்பினும் மாதுளை தோலில் பல ஆரோக்கிய நன்மைகள் இருப்பது பலருக்கு தெரியாது.

பெரும்பாலும் கசப்பான மற்றும் துவர்ப்பு சுவை கொண்ட மாதுளம் தோலில் விட்டமின்கள், ஆக்சிஜன் ஏற்றங்கள், மற்றும் சத்து நிறைந்த பொருட்கள் உள்ளதாக கூறிவருகின்றனர். அவை நம் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது எனவும், விதைகளை விட மாதுளை தோல் ஆரோக்கியமானவை என்றும் ஆய்வுகள் மூலம் நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

எனவே மாதுளை தோலில் உள்ள சில நன்மைகள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்

மாதுளை தோலில் எலாஜிக் அமிலம் போன்ற கலவைகள் உள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மேலும் இந்த கலவைகள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை தூண்டவும், தொற்று மற்றும் நோய்களுக்கு எதிராக உடலை பாதுகாக்கவும் உதவுகின்றன.

மேலும் மாதுளை தோலில் நார்ச்சத்து உள்ளதால் இது செரிமான ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியம். நார்ச்சத்து குடல் இயக்கத்தை சீராக்கவும், மலச்சிக்கலை தடுக்கவும், பெருங்குடல் புற்றுநோய் போன்ற செரிமான பிரச்சனைகளை குறைக்கவும் இது உதவுகிறது.

மேலும் இதய ஆரோக்கியத்தை பராமரிக்க கொழுப்பின் அளவை குறைப்பது அவசியம். மாதுளை தோலில் பாலிபினால்கள் போன்ற கலவைகள் உள்ளன இவை ஆரோக்கியமான சருமத்துக்கு உதவும் என கூறுகின்றனர்.