குழந்தை பெற்றுக்கொண்டால்? நிறுவனத்தின் வினோத அறிவிப்பு

இந்த நிறுவனம் தனது ஊழியர்களுக்குக் குழந்தைகளைப் பெற்றதற்காக ரூ.62 லட்சம் கொடுக்கிறது, ஏன் தெரியுமா?

தென் கொரியாவின் வீழ்ச்சியடைந்து வரும் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையிலும், சியோலில் உள்ள Booyoung எனும் ஒரு முக்கிய கட்டுமான நிறுவனம் ஒரு அற்புதமான ஊக்கத் திட்டத்தை வெளியிட்டது.

அந்நிறுவனத்தின் பணியாளர்கள் பெற்றெடுக்கும் குழந்தைகளுக்கு 100 மில்லியன் கொரியன் வோன் (தோராயமாக $75,000 அல்லது ₹62,26,106) கணிசமான ரொக்கப் பரிசாக வழங்குவதாக அறிவித்துள்ளது. முன்னதாக, குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் பொது நிகழ்ச்சி கண்ணீர் சிந்தியது சர்வதேச ஊடகங்களில் பேசும் பொருளானது.