ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மாநில அளவிலான கருத்தரங்கு

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை இணை மருத்துவ அறிவியல் கல்லூரி நிறுவனம் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவும் இணைந்து மாநில அளவிலான இண்டென்சிகேர்-2024 கருத்தரங்கானது மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

துவக்கவிழாவின் சிறப்பு விருந்தினரான நரம்பியல் அறுவை சிகிச்சை உயர் ஆலோசகர் மற்றும் துறை தலைவருமான டாக்டர் ஆர். முரளி அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி சிறப்பித்தார். மேலும் தீவிர சிகிச்சை பிரிவின் ஆலோசகர் மற்றும மயக்க மருந்தியல் துறை மருத்துவருமான டாக்டர் பி. ரவிசங்கர் அவர்கள் விழாவின் கருப்பொருளை வெளியிட்டார்.

இக்கருத்தரங்கானது தலைமை நிர்வாக அதிகாரி திரு.சி.வி. ராம்குமார், மருத்துவ இயக்குநர் டாக்டர் எஸ். ராஜகோபால், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் எஸ். அழகப்பன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பு தலைவராக தீவிர மருத்துவ சிகிச்சை நிபுணர் டாக்டர் ராம்குமார் மற்றும் ஒருங்கிணைப்பு செயலாளராக இணை மருத்துவ அறிவியல் கல்லூரி நிறுவன முதல்வர் டாக்டர் சத்யா ஆகியோரால் கருத்தரங்கிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

இக்கருத்தரங்கில் பல்வேறு துறைகளை சார்ந்த சிறப்பு மருத்துவர்களான டாக்டர் ஆர்.பி. ராம்குமார், டாக்டர். ஜெ. கீதாஞ்சலி, டாக்டர். அருண் கங்காதர், டாக்டர் பி. ரவிசங்கர், டாக்டர் எம். முத்துக்குமார், டாக்டர் என். மஞ்சுநாதன், டாக்டர் எ.பி. நவநீத், டாக்டர் ஜி. கிருஷ்ண கருத்தரங்கினை சிறப்புற வழிநடத்தினர். சமீரா முதலானோர் பேச்சாளர்களாக பங்குபெற்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலுள்ள இணை மருத்துவ அறிவியல் கல்லூரி நிறுவனங்களிலிருந்து 300க்கும் மேற்பட்ட மாணவர்கள், மருத்துவர்கள் தொழில்நுட்பவியலாளர்கள், செவிலியர்கள் பங்கேற்று இக்கருத்தரங்கின் மூலம் பயனடைந்துள்ளனர்.