
முதலை பிடியில் இருந்து தப்பிக்க, அதன் கண்விழிகளில் கட்டைவிரலை விட்டால் உடனடியாக தப்பிக்கலாம்.
ஒரு பெண் கானாங்கெளுத்தி (மீன்) ஒரே நேரத்தில் 500000 முட்டைகளை இடுகிறது.
பூனைகளால் நூற்றுக்கும் மேற்பட்ட குரல் ஒலிகளை உருவாக்க முடியும். ஆனால் நாய்களால் பத்து வித குரல் ஒலிகளை மட்டுமே உருவாக்க முடியும்.
பாலூட்டிகளில் யானைகளால் மட்டுமே குதிக்க முடியாது.
உங்கள் உடலில் உள்ள எலும்புகளில், கால் பங்கு உங்கள் பாதத்தில் இருக்கிறது.
கரப்பான் பூச்சியின் தலை வெட்டப்பட்டாலும், அதனால் பல வாரங்கள் உயிர் வாழ முடியும்.
ஒரு சராசரி மனிதனுக்கு பிறக்கும் போது 300 எலும்புகள் இருக்கும்.வயதாகும் போது அது 206 ஆக குறைந்துவிடும்.
எந்த மனிதனாலும் தும்மும் பொழுது கண்களை திறந்து வைத்திருக்க முடியாது.