கே.பி.ஆர். கலை அறிவியல் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

கே.பி.ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் வணிகவியல் துறையின் கணினிப் பயன்பாட்டுப் பிரிவும் வணிகவியல் வர்த்தகப் பிரிவும் மிராண்டா ஹவுஸ் டெல்லி பல்கலைக்கழகத்துடன் இணைந்து, ‘தொழில்நுட்பப் புதுமைகள் மற்றும் நிலையான வளர்ச்சிக்குரிய மாற்றங்கள்’ எனும் தலைப்பில் தேசியக் கருத்தரங்கம் இருநாட்கள் நடைபெற்றன.

ரஷ்யா, குவைத், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற பல்வேறு நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் ஆய்வுக்கட்டுரைகள் பெறப்பட்டு, சிறப்பு விருந்தினர்களால் கருத்தரங்க ஆய்வுக்கோவை வெளியிடப்பட்டதோடு, ஆய்வறிஞர்களால் ஆய்வுரை விளக்கங்கள் வழங்கப்பட்டன.

கருத்தரங்கில் கல்லூரி முதல்வர் கீதா தலைமையேற்று, தற்காலச் சமூகத்தில் உள்ள தொழிற்நுட்பத்தின் அடிப்படை நிலைக்கூறுகள், அதன் முக்கியத்துவங்கள், தொழிற்நுட்பத்தில் புதுமைகளைப் புகுத்துவதன் மூலம் கிடைக்கப்பெறும் சமூகப்பயன்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வினுடைய வரவேற்புரையை வணிகவியல் பள்ளியின் புலமுதன்மையர் குமுதாதேவி நல்கினார். இக்கருத்திரங்கின் மையப்பொருண்மை பற்றிய நோக்கவுரையை வணிகவியல் துறையின் கணினிப் பயன்பாட்டுப் பிரிவுத் துறைத்தலைவர் சேகர் வழங்கினார்.