கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது.

கோவை அவினாசிரோடு, நவஇந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியும் போதிமரம் என்ற அமைப்பும் இணைந்து 12ம் வகுப்பு மாணாக்கர்களுக்கு இணையவழி வாயிலாக நீட் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. இதன் முக்கியத்துவம் இந்த நீட்தேர்வில் நகர்புற மாணவர்கள் மட்டுமல்லாது கிராமப்புற மாணவர்களும் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் இத்தேர்வும், பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டன. இத்தேர்வானது தமிழ் மற்றும் ஆங்கில வழி வாயிலாக இணையவழியில் நடத்தப்பட்டது. இத்தேர்வில் பல்வேறு பள்ளிகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இத்தேர்விற்கான வினாக்களை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள் செந்தில்குமார், வனிதா, மெரினால் ஆகியோர் இணையவழியில் வினாக்களை பதிவேற்றம் செய்தனர். இத்தேர்வை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் பொன்னுசாமி அவர்கள் துவக்கி வைத்தார். போதிமரம் ஆசிரியர் குழுவின் தலைவர் திரு.மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.