ஹோண்டா மோட்டார்  குழந்தைகள் போக்குவரத்து பயிற்சி பூங்காவின்  7வது ஆண்டு நிறைவு விழா

நகரத்தில் சாலைப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பாக  ஓட்டும் பழக்கம் குறித்த நேர்மறையான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்ட் ஸ்கூட்டர் இந்தியா,கோயம்புத்தூர் பாப்பநாயக்கன்பாளையம் பலசுந்தரம் சாலையில் உள்ள குழந்தைகள் போக்குவரத்துப் பயிற்சி பூங்காவின் 7வது ஆண்டு நிறைவு விழாவை காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் கொண்டாடியது,

போக்குவரத்து துணை ஆணையர்  ராஜராஜன், மற்றும் போக்குவரத்து உதவி துணை ஆணையர் சிற்றரசன் ஆகியோரும் பங்கேற்றனர். ஜனவரி 2017 இல், ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்ட்  ஸ்கூட்டர் இந்தியா கோயம்புத்தூர் போக்குவரத்து காவல்துறையுடன் இணைந்து கோவையில் போக்குவரத்து பயிற்சிப் பூங்காவைத் திறந்து வைத்தது. குட்டி நகரம் கருத்தாக்கத்தின் அடிப்படையில்,  டிராஃபிக் சிக்னல்கள், ஜீப்ரா கிராசிங்குகள் மற்றும் வேகத்தடைகள் போன்ற உண்மையான சாலை அம்சங்களை இந்த  போக்குவரத்து பூங்கா உருவகப்படுத்துகிறது. நகரத்தில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஊக்குவிக்கின்ற வகையில் ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்ட் ஸ்கூட்டர் இந்தியா அனைத்து வயதினருக்கும் அதன் தினசரி பயிற்சிகள் மூலம், அதன் துவக்கத்திலிருந்து,  கிட்டத்தட்ட 3 லட்சம் பேருக்கு (2.5 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் மற்றும் 50,000 க்கும் மேற்பட்ட புதிய மற்றும் ஏற்கனவே உள்ள ஓட்டுநர்கள் ஆண் மற்றும் பெண் இருபாலரும்) வெற்றிகரமாகக் கற்பித்துள்ளது.

போக்குவரத்து பயிற்சி பூங்காவின் 7வது ஆண்டு நிறைவு விழாவின் ஒரு பகுதியாக, “மாரத்தான் பாதுகாப்பு சவாரி செயல்பாடு” என்ற ஒரு புதிய செயல்பாட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை எந்தவித இடைவேளையும் இல்லாமல் பல்வேறு வகையான பாதுகாப்பு சவாரி செயல்பாடுகளின் ஒரு வரிசையை நடத்துவதே இந்த செயல்பாட்டின் யோசனையாகும் . இது அனைத்து வயதுக்குழு மாணவர்களை உள்ளடக்கியது மற்றும் போக்குவரத்து மீறுபவர்களுக்கான பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான நிலையான சோதனை போன்ற ஏராளமான எண்ணிக்கையிலான ஈடுபாட்டுடன் கூடிய செயல்பாடுகளை உள்ளடக்கியது. இந்த மாரத்தான் பாதுகாப்பு சவாரி நடவடிக்கையில் சுமார் 219 பங்கேற்பாளர்கள் பயிற்சி பெற்றனர்.