2 மடங்கு வேகமான வளர்ச்சியை அளிக்கும் புதிய காம்ப்ளான் அறிமுகம்  

சைடஸ் வெல்னஸ் லிமிடெட் இன் ஒரு முன்னணி சுகாதார உணவுப் பானமான காம்ப்ளான், மிகவும் பிரபலமான தென்னிந்திய நடிகை சினேகாவைக் கொண்ட புதிய “நான் கம்ப்ளான் பையன் / பெண்” பிரச்சாரத்தை அறிவிக்கிறது.

இந்த புதிய வெளியீட்டில் சினேகா வளரும் குழந்தைகளுக்குப் புரதத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, மற்ற முன்னணி குழந்தைகளின் ஆரோக்கிய உணவு பானங்களை விட 63% அதிக புரதம் கொண்ட காம்ப்ளானை சிறந்த தீர்வாகப் பரிந்துரைக்கிறார். தென் பிராந்தியங்களில்  பிராண்டின் புதிய எடுத்துரைப்பைச் சினேகா முன் நடத்த உள்ளார். இந்த புதிய தகவல் வெளியீட்டில், பள்ளி ஆண்டு தின கொண்டாட்டத்தில் தாய்மார்கள் மற்றும் அவர்களது குழந்தைகளுடன் சினேகா பேசுபவராகக் காட்டப்பட்டுள்ளார். தங்கள் குழந்தைகளின் வளரும் ஆண்டுகளில், மருத்துவர் புரதத்தின் முக்கியத்தத்துவத்தை வலியுறுத்தினார் என்பதையும், குழந்தையின் தினசரி புரதத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வழக்கமான தினசரி உணவு எப்போதும் போதுமானதாக இல்லை என்பதையும் அவர்கள் பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.

34 முக்கிய ஊட்டச்சத்துகளுடன் முன்னணி குழந்தைகளின் ஆரோக்கிய உணவு பானத்தை விட 63% அதிக புரதத்தைக் கொண்டிருப்பதால், விஞ்ஞான ரீதியாக உருவாக்கப்பட்ட கலவையான காம்ப்ளானை அவர்கள் பரிந்துரைக்கிறார்கள். எனவே காம்ப்ளான் 2 மடங்கு வேகமான வளர்ச்சியை அளிக்கிறது மற்றும் ஞாபகசக்தி மற்றும் கவனம் செலுத்துதலை ஆதரிக்கிறது. இந்த விளம்பரம் பிராண்டின் மிகவும் நினைவுகூரப்பட்ட பிரபலமான கோஷமான “நான் காம்ப்ளான் பாய்-கேர்ள்” கோஷத்துடன் முடிவடைகிறது.

காம்ப்ளானின் புதிதாகத் தொடங்கப்பட்ட இந்த பிரச்சாரத்தைப் பற்றி, சைடஸ் வெல்னஸின் தலைமை நிர்வாக அதிகாரி தருண் அரோரா பேசுகையில், “காம்ப்ளான் ஆனது குழந்தைகளுக்கான ஆரோக்கிய உணவுப் பான வகைகளில் ஒரு பிரபலமான பிராண்ட் மற்றும் 100% பால் புரதத்தைக் கொண்டுள்ளது. குழந்தைகளின் முழு வளர்ச்சிக்குச் சரியான அளவு நல்ல தரமான புரதத்தை வழங்க வேண்டியதன் அவசியத்தைப் பல ஆண்டுகளாகத் தாய்மார்களுக்கு நாங்கள் எடுத்துரைத்துள்ளோம்”என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய சினேகா, “இப்போது “நான் காம்ப்ளான் பாய்-கேர்ள்” பிரச்சாரத்தின் புதிய பதிப்பில் ஒரு “காம்ப்ளான் மாம்” என்ற முறையில் இணைவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த புதிய பிரச்சாரத்தின் மூலம், ஒவ்வொரு தாய்க்கும் அவர்களின் வளரும் குழந்தைகளுக்குச் சரியான ஊட்டச்சத்தை வழங்குவதற்கான சவாலுக்கு நாங்கள் தீர்வை வழங்குகிறோம்.”என்று கூறினார்.