ஆவின் பால் தொழிற்சாலையை பார்வையிட்டனர் வி.எல்.பி., மாணவர்கள்

வி.எல்.பி ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுகலை மற்றும் ஆராய்ச்சித் தொழில் முனைவோர் மேம்பாட்டு பிரிவு சார்பாக பச்சாபாளையத்தில் உள்ள ஆவின் பால் தொழிற்சாலைக்கு இண்டஸ்ட்ரியல் விசிட் மேற்கொண்டனர்.

இயந்திரங்களைப் பயன்படுத்தி பதப்படுத்தப்பட்ட பல்வேறு வகையான பால் மற்றும் பால் பொருட்களைத் தயாரிப்பது குறித்த அறிவை மாணவர்கள் பெற்றனர். மேலும், பதப்படுத்தப்பட்ட பால் பேக்கேஜ் செய்யப்படும் முறை, ஏற்றுமதி செய்யப்படும் நிலை, பால் சேமிப்பு ஆகியவற்றைத் தொழிற்சாலையில் கண்டறிந்தனர்.

இதில் மேலாண்மைத் துறை மாணவர்கள் 41 பேர், இடிசி துறையிலிருந்து 29 மாணவர்கள் மூன்று ஆசிரியர்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.