நாளை தொடங்கும் கேலோ இந்தியா – மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தேசிய அளவிலான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுக் கழகம் சார்பில் நாளை தமிழகத்தில் துவங்குகிறது. சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நான்கு மாவட்டங்களில் நடைபெறும் இப்போட்டியினை சென்னையிலிருந்து பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.

பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி உள்விளையாட்டு அரங்கு, மற்றும் கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இந்நிலையில் பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் கூடைப்பந்து போட்டியும் தாங் டா போட்டியும் நடைபெற உள்ளதை முன்னிட்டு முன்னேற்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் உடனிருந்தனர்.