ராம்ராஜ் காட்டன் புதிய மைல்கள்!

உலக முதலீட்டாளர் மாநாட்டில் ராம்ராஜ் காட்டன் நிறுவனம் 1,000ம் கோடி ரூபாய்க்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

சென்னை நந்தம்பாக்கத்தில் வர்த்தக மையத்தில் 2024 உலக முதலீட்டாளர் மாநாட்டின் முதல் நாளில் ரூ.5.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழில் நிறுவனத் தலைவர்களும், வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.

இதில் ராம்ராஜ் காட்டன் நிறுவனம் சார்பில் ஐந்து ஆண்டுகளில் 1000 கோடி ரூபாய்க்கான தொழில் முதலீடு 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு, நூற்பு நெசவு பதப்படுத்துதல் ஆலை அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன் முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார்.

புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து, ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன் கூறுகையில், தமிழக அரசுடன் இணைந்து செயல்படுத்த உள்ள தொழில் முதலீடுகள் மூலமாக, மேலும் பல்லாயிரக்கணக்கான நெசவாளர்களுக்கு முழுமையான வேலைவாய்ப்பு அமையும். அதோடு தொழில் முன்னேற்றத்தில் தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்ல பேருதவியாக இருக்கும் என்றார்.

இரண்டாவது நாளின் முடிவில், ஹூண்டாய், ஜேஎஸ்டபள்யு, டாடா எலக்ட்ரானிக்ஸ், வின்ஃபாஸ்ட், கோத்ரேஜ், பெகாட்ரான், டிவிஎஸ், டாடா மற்றும் அதானி குழுமம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்கள் சுமார் ரூ.6.64 லட்சம் கோடி முதலீட்டில் ஒப்பந்தம் செய்துள்ளதுள்ளனர்.