பி. எஸ். ஜி தொழில்நுட்ப கல்லூரியில் பட்டமளிப்பு விழா

பி. எஸ். ஜி தொழில்நுட்பம் மற்றும் பயன்சார் ஆராய்ச்சி கல்லூரியின் 5 வது பட்டமாளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்விற்கு பி. எஸ். ஜி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் எல். கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

 

சிறப்பு விருந்தினராக இந்திய தொழில்நுட்ப கழகத்தின் (ஐஐடி மெட்ராஸ்) டீன் பேராசிரியர் ஆர். சாரதி பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், இன்றைய தினங்களில் இந்தியாவில் பேசப்படும் ஓர் அடிப்படை விஷயமாக திறன் மேம்பாடு அமைகிறது . நிலவின் தென் துருவத்தில் சந்திராயன்-3 வெற்றிகரமாக தரையிறக்கி சாதனைப்படுத்தியத்தில் நாம் அனைவரும் பெருமையடைய வேண்டும். அதன்பின், பி.எஸ்.ஜி கல்லூரியின் முன்னாள் மாணவர்களும் பங்களித்துள்ளனர் என்பது தனக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது.

அனைத்து தொழில்நுட்ப பொருட்களிலும், இந்தியர்களின் பங்களிப்பு என்பது கட்டாயம் இருக்கிறது. வருங்காலங்களிலும் தொழில்நுட்ப வளர்ச்சியில் மாணவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. தடைகளை நினைத்து வருந்தாமல் மாணவர்கள் தங்களது எண்ணம் மற்றும் பாதையினை தெளிவாக திட்டமிட்டு தேர்வு செய்தால், வாழ்வில் பெரும் வெற்றியடைய அடையமுடியும்.

இந்திய தொழில்நுட்ப கழகம் (ஐஐடி மெட்ராஸ்), நானோ துகள்கள் உற்பத்தியில் உலகளவில் ஆறில் ஒன்றாக உயர்ந்து இருக்கிறது. தொழில்நுட்பத்தை மாற்றியமைப்பது மிகவும் முக்கியமானது. இடைநிலை சிந்தனைகளினால் தொழில்நுட்ப அமைப்பின் நம்பகத்தன்மையை மேம்படுத்த முடிகிறது.மேலும், தொழில்நுட்ப துறையில் வெற்றியடைவது தனிப்பட்ட ஒருவரால் சாத்தியமாகது. எனவே உங்களுக்கான குழுவினை அமைத்துக்கொண்டு திறம்பட செயல்பட வேண்டும். எண்ணங்களை உறுதியாக்கி , உறுதியாகவும், ஆக்கபூர்வமாகவும் செயல்படவேண்டும். மேலும், வாழ்வில் எந்த உயர்விற்கு சென்றாலும் பெற்றோர்களை மறந்து விடக்கூடாது என மாணவர்களிடம் பேசினார்.

 

 

 

 

முன்னதாக நிகழ்விற்கு பி. எஸ். ஜி தொழில்நுட்ப கல்லூரி செயலாளர் மோகன்ராம் வரவேற்புரை வழங்கினார்.

நிகழ்வில் கல்லூரி முதல்வர் சரவணகுமார், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், பட்டம் பெற்ற மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.