கட்டுமான பொருட்களை சாலைகளில் குவித்தால் ‘அபராதம்’

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாகவும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் கட்டுமானப் பொருட்களை சாலைகளில் குவித்து வைத்து பணிகள் மேற்கொள்ளும் கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும், கட்டுமானப் பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்தவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் உத்தரவு.

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம், வார்டு எண்.71-க்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆய்வு மேற்கொள்ளும் பொழுது சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாகவும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் கட்டுமானப் பொருட்களை குவித்து கட்டிடம் கட்டும் பணியினை மேற்கொண்ட இரண்டு கட்டிட உரிமையாளர்களுக்கு முறையே ரூ.1,00,000/ மற்றும் 50,000 /- வீதம் ஆகமொத்தம் ரூ. 1,50,000/- நோட்டீஸ் வழங்கி அபராதம் விதித்து, கட்டுமானப் பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்தவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டார்.

இதேபோல மாநகராட்சி பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாகவும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் கட்டுமானப் பொருட்களை சாலைகளில் குவித்து வைத்து பணிகள் மேற்கொள்ளும் கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும், கட்டுமானப் பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்தவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.