கே.பி.ஆர் கல்லூரியில் காளையர் திருவிழா!

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி மற்றும் கோவை ரேக்ளா அமைப்பு இணைந்து நடத்தும் காளையர் திருவிழா (ரேக்ளா ரேஸ்) கொண்டாடப்பட்டது. நான்காம் ஆண்டாக நடத்தப்படும் இப்பந்தையத்தினை கே.பி.ஆர் குழுமத்தின் தலைவர் ராமசாமி மற்றும் அவரின் துணைவியார் தலைமையேற்று விழாவை துவக்கி வைத்தனர்.

200, 300 மீட்டர் என இரு பிரிவுகளில் நடத்தப்பட்ட இப்பந்தையத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 400க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள். வெற்றிபெற்றோருக்கு முதல் பரிசாக ஹோண்டா ஆக்டிவா, இரண்டாம் பரிசாக ஒரு பவுன் தங்க நாணயம், மூன்றாம் பரிசாக 3/4 பவுன் தங்க நாணயம், நான்காம் பரிசாக 1/2 பவுன் தங்க நாணயம், ஐந்தாம் பரிசாக 1/4 பவுன் தங்க நாணயம், ஆறு முதல் பத்தாம் பரிசாக 1 கிராம் தங்க நாணயங்கள் வழங்கப்பட்டன. மேலும் முதல் 30 இடங்களைப் பிடித்தப் போட்டியாளர்களுக்கு வெள்ளிநாணயங்கள் பரிசாக வழங்கிச் சிறப்பிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கே.பி.ஆர் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் அனந்தகிருஷ்ணன் மற்றும் அவரது துணைவியார் காயத்ரி, கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் முதல்வர் முனைவர் கீதா, கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் ராமசாமி ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். மேலும் கே.பி.ஆர் கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள், கோவை ரேக்ளா தலைமைச் சங்க உறுப்பினர்கள், பார்வையாளர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இப்பந்தையத்தினைக் கண்டு மகிழ்ந்தனர்.