டொயோட்டா கிர்லோஸ்கரின் ‘பார்ச்சூனர் லீடர் எடிஷன்’ அறிமுகம்’

இந்திய வாடிக்கையாளர்களால் மிகவும் விரும்பப்படும் காராக டொயோட்டா நிறுவனத்தின் பார்ச்சூனர் கார் திகழ்ந்து வருகிறது. அந்த வெற்றியை கொண்டாடும் வகையில், டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் ‘பார்ச்சூனரின் லீடர் எடிஷனை’ இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

பார்ச்சூனர் லீடர் எடிஷன் அதன் புகழ்பெற்ற அம்சங்களுடன், பல்வேறு கூடுதல் சிறப்புகளையும் தனித்துவமான வடிவமைப்பையும் கொண்டுள்ளது. இந்த கார் கம்பீரத் தோற்றத்தில் தனித்து நிற்கிறது, பல்வேறு நவீன வடிவமைப்புகளின் காரணமாக கண்கவர் தோற்றத்தைக் கொண்டுள்ளது. இதன் முன் மற்றும் பின்பக்க பம்பர் ஸ்பாய்லரைக் கொண்ட இந்த கார், தலைமைத்துவத்தின் உண்மையான சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது.

இதன் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று, அதன் முக்கிய இரட்டை வண்ண வெளிப்புறம் ஆகும். இது ‘கருப்பு, வெள்ளை மற்றும் தெளிவானது’ என்பதை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்த தனித்துவமான சிறப்பு அம்சமானது இதன் வெளிப்புற தோற்றத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அதன் பிரீமியம் கைவினைத்திறனையும் காட்டுகிறது. இதன் உட்புறத்தைப் பொறுத்தவரை இரட்டை வண்ண இருக்கைகளைக் கொண்டுள்ளது, இது ஒப்பிடமுடியாத வசதியையும் நேர்த்தியையும் வழங்குகிறது,

வயர்லெஸ் சார்ஜர் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் முதல் தானாக மடக்கும் கண்ணாடிகள் வரை, இந்த கார் வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், இது கருப்பு நிற அலாய் சக்கரங்களுடன் வருகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு திருப்பத்திலும் எந்தவித பயமும் இல்லாமல் காரை தைரியமாக திருப்பலாம். இந்த சக்கரங்கள் காரின் அழகிற்கு மேலும் அழகு சேர்ப்பதோடு மட்டுமல்லாமல், சாலையில் செல்லும் காண்போர் கண்களை கவரும் வகையில் கம்பீரத்தை தருகிறது.

பார்ச்சூனர் லீடர் எடிஷன் அறிமுகம் குறித்து டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் விற்பனை-சேவை-பயன்படுத்தப்பட்ட கார் வர்த்தகப் பிரிவின் துணைத் தலைவர் சபரி மனோகர் கூறுகையில், நாங்கள் செய்யும் அனைத்திற்கும் எங்கள் வாடிக்கையாளர்கள் தான் இதயம். மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் மற்றும் ஓட்டுனர் அனுபவங்களுக்கான அவர்களின் வளர்ந்து வரும் விருப்பங்கள் மற்றும் தேவைகளை, அறிந்து அவற்றை நாங்கள் அவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். எங்களின் புதிய பார்ச்சூனர் லீடர் எடிஷன் அதன் கம்பீரமான ஸ்டைல் உடன் மேலும் கூடுதல் அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இணையற்ற ஆற்றல் மற்றும் செயல்திறனை வழங்குகிறது. பல்வேறு வசதிகள் மற்றும் அழகிய வடிவமைப்புடன் கூடிய புதிய தொழில்நுட்பங்களை வழங்கும் எங்கள் நிறுவனத்தின் சான்றாக இந்த புதிய கார் உள்ளது. இதன் அழகிய வெளிப்புற வடிவமைப்பு, கண்ணைக் கவரும் மற்றும் வசதியான உட்புறங்கள் மற்றும் மேம்பட்ட உயர் தொழில்நுட்ப அம்சங்கள், இந்த காரை ஒரு சிறந்த காராக முன்னிலைப்படுத்துகின்றன என்று தெரிவித்தார். இந்த காரை வாங்குவதற்கான முன்பதிவுகள் இப்போது துவங்கி உள்ளன. வாடிக்கையாளர்கள் இதன் இணையதளம் toyotabharat.com அல்லது அருகில் உள்ள ஷோரூம்களுக்கு சென்று முன் பதிவு செய்யலாம்.