முதல்வரின் கவனத்தை  ஈர்க்கும் வகையில் மனித சங்கிலி போராட்டம்

தமிழ்நாடு சிறு குறு தொழில் கூட்டமைப்புகள் ஒன்றிணைந்து தொழில்துறை மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 8-வது கட்ட போராட்டமாக மனித சங்கிலி போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகே கோவை மாவட்ட சிறுகுறு தொழில் அமைப்பினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் இணைந்து மனித சங்கிலி போராட்டத்தை நடத்தினர்.

இதில் தமிழக அரசிடம்  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில்  கையில் பதாகைகள் ஏந்தி சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு தொழிலாளர்கள் கைகோர்த்து நின்று கோரிக்கையை வலியுறுத்தினர்.

குறிப்பாக 430% நிலை கட்டணம் முழுமையாக திரும்ப பெற வேண்டும், 2 ஆண்டுக்கு கட்டண உயர்வு இருக்க கூடாது, 12 கிலோ வாட்டுக்கு கீழ் மின் இணைப்பிற்கு 3ஏ 1 டாரிப்  மாற்ற வேண்டும்,பீக் ஹவர் கட்டணத்தை முழுமையாக திரும்பப் பெற வேண்டும், சொந்த தொழில் கூடங்கள் மேல் அமைக்கும் சோலாருக்கான கட்டணத்தை முழுமையாக திரும்ப பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

இதில் சுமார் 600க்கும் மேற்பட்ட சிறு குறு தொழில் நிறுவனத்தினர், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.