அதிமுகவிற்கு கூடுவது கொள்கை கூட்டம் பாஜகவிற்கு கூடுவது காக்கா கூட்டம் -அமைச்சர் செல்லூர் ராஜூ

அதிமுகவில் அடுத்ததடுத்து வெடித்தது, பாஜகவுக்கு எதிரான  விமர்சனகள் மற்றும் சர்சைகள். பாஜகவுக்கு எதிராக அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேசிய விவகாரம், இப்போது மெல்ல சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அந்த சர்சைகள் அடங்குவதற்குள், எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல், அடுத்த சம்பவத்தை செல்லூர் ராஜூ ஏற்படுத்தியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது, அதிமுகவை துரும்பு அளவு விமர்சித்தால் தூண் அளவு பதிலடி கொடுப்போம்.  வி.பி.துரைசாமி எல்லாம் அதிமுகவை பற்றி பேசலாமா, என்ன கொடுமை  சார் இது என,  நொந்துகொண்ட செல்லூர் ராஜூ, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மத்திய அரசின் பதவிக்காக அரசியல் செய்து வருவதாகவும் விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக போன்ற கட்சிகள் தான்  முக்கியமான கட்சிகள். இவற்றுக்கு ஆயிரக்கணக்கான கிளைகள் உள்ளன. அதிமுக தான் பிரதான எதிர்க்கட்சியாக வீற்றிருக்கிறது. பாஜக எங்கோ ஏதோ ஒரு இடத்தில் நடத்தும் கூட்டங்களுக்கு ஆயிரம் பேரோ, இரண்டாயிரம் பேரோ அல்லது ஐந்தாயிரம் பேரோ கூடுவது பெரிய விஷயமல்ல. நாங்க காக்கா கூட்டம் இல்லை. கொள்கைக் கூட்டம். இரைகளைப் போட்டால் காக்கா கூடும். இரை முடிந்ததும் பறந்துவிடும்

வி.பி.துரைசாமி எங்களை விமர்சனம் செய்வது எந்த விதத்தில் நியாயம். திமுகவில் இருந்து பாஜகவிற்கு அவர் எதற்கு சென்றார் தெரியாதா? என, கேள்வி எழுப்பினார். அதிமுகவை பாஜக துரும்பு அளவு விமர்சித்தால், தூண் அளவுக்கு பதிலடி தருவோம்.

யாருடனும் கூட்டணி இல்லை, தனித்தே போட்டி என சொல்ல அதிமுக தயார்? மற்ற கட்சியினர் தயாரா? என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசிடம் பதவி பெறுவதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரசியல் செய்வதாக விமர்சனம் செய்துள்ளார். ஏற்கனவே தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த தமிழிசை, எல்.முருகன் ஆகியோர் அரசு பதவி பெற்றதை சுட்டிக்காட்டி பேசினார்.

பாஜக கட்சியை வளர்ப்பதற்காக அண்ணாமலை அரசியல் செய்கிறார். தமிழிசைக்கு கவர்னர் பதவி கிடைத்தது போல, எல்.முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்தது போல, அண்ணாமலையும் தனக்கு ஏதாவது பதவி கிடைக்கும் என ஆசைப்பட்டு ஏதோ அரசியல் செய்கிறார். கூட்டம் திரட்டுவது எல்லாம் பெரிய விஷயமே அல்ல. பாஜகவிற்கு கூடுவது காக்கா கூட்டம்; அதிமுகவுக்கு கூடுவது கொள்கைக் கூட்டம் என்றார்.