தி சென்னை சில்க்ஸ் சார்பில் நிவாரண பொருட்கள் 

சென்னையில் மிக்ஜாம் புயல் சேதம் காரணமாக பல்வேறு பகுதிகளில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில்  தி சென்னை சில்க்ஸின் வேளச்சேரி கிளையில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உணவு பொட்டலம், தண்ணீர் கேன்கள், 20 மொபைல் சார்ஜிங் பாயிண்ட்ஸ், காபி உள்ளிட்ட வசதிகளை  இலவசமாக வழங்க ஏற்பாடு செய்துள்ளனர். வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.