எடை இழப்புக்கு சிறந்தது யோகாவா? நடைப்பயிற்சியா?

நடைப்பயிற்சி மற்றும் யோகா ஆகிய இரண்டும் எடை இழப்பு உட்பட பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது.  இவை இரண்டும் பல்வேறு நன்மைகளை அளிக்கின்ற போதிலும் எடை இழப்புக்கு எது சிறந்தது என்பது குறித்து இங்கே காணலாம்.

நடைப்பயிற்சியின் நன்மைகள்: 

நடைப்பயிற்சி என்பது நம் அன்றாட வாழ்வில் நடைமுறைப்படுத்தும் ஓர் எளிய உடற்பயிற்சி ஆகும்.

தினமும் நடைப்பயிற்சியைப் பின்பற்றுவதனால் நம் இதயத் துடிப்பு அதிகரித்து, உடலில் உள்ள கொழுப்புகள் மற்றும் கலோரிகளை எரிய செய்கிறது. இதுவே எடை இழப்புக்கு ஆதரிக்கிறது. மேலும், ஆரம்ப நிலையிலிருந்து வயதானோர் வரையிலும் நடைப்பயிற்சி மேற்கொள்வது சிறந்ததாகும்.  அதனை  இயற்கையான சூழலில் மேற்கொள்வதால் மன அழுத்தம் குறைவதோடு, எடையை இழக்கவும் வழிவகுக்கிறது.

யோகாவின் நன்மைகள் : 

உடல் எடையைக் குறைக்க யோகாவுக்கு பெரும் சக்தி உண்டு. இது மட்டுமின்றி, யோகா,  சுவாச பிரச்னைகள் நீங்கி, நினைவாற்றலை அதிகரிக்கவும் உதவுகின்றன. மேலும், வின்யாசா அல்லது பவர் யோகா போன்ற சில யோகா பயிற்சிகளின் தொடர்ச்சியான இயக்கத்தினால், நம் உடல் வலிமையடைந்து இதயத் துடிப்பைத் திறம்பட உயர்த்துகிறது. இதனால் உடலில் உள்ள கலோரிகளை எரித்து எடை இழப்பிற்கு ஊக்குவிக்கிறது.

அதிக கலோரியை எரிக்கக்கூடியது எது?

நடைப்பயிற்சி மற்றும் யோகா ஆகியவற்றில் அதிக கலோரி எரியும் திறனை ஒப்பிடும் போது, நடைப்பயிற்சியே பொதுவாக  அதிக கலோரிகளை எரிக்கிறது. இருப்பினும், உடற்பயிற்சிக்கான யோகாவில்  தசையின் வலிமை அதிகரிப்பதால் உடலில் வளர்சிதை மாற்றம் மேம்படுகிறது. இது நம்  ஓய்வு நேரத்தில் கூட கலோரிகளை எரித்து, உடல்  எடை இழக்க ஆதரிக்கிறது.

நம் உடற்பயிற்சியில் நிலைத்தன்மை என்பது மிகவும் முக்கியமானதாகும். அதன் வகையில் நடைப்பயிற்சியைத் தினசரி  வழக்கத்தில் ஒருங்கிணைப்பது, எளிமையானது. அதே போன்றே யோகாவின் உடற்பயிற்சி நுட்பங்களைக் கற்றுக்கொள்வதற்குச் சற்று காலம் எடுத்துக்கொண்டாலும், அதனைத் தொடர்ந்து செய்வதால், நம் மனம் தியான நிலைக்குச் சென்று அமைதியை நிலவுகிறது. எனவே  நடைப்பயிற்சி மற்றும் யோகா ஆகிய இரண்டையும் நீண்ட நாள் பழக்கத்தில் வைத்துக்கொள்வது எளிது.

எது சிறந்தது?

இறுதியில், நடைப்பயிற்சி மற்றும் யோகா இரண்டும் எடை இழப்புக்குத் தனித்துவமான நன்மைகளை வழங்குகின்றன. நடைப்பயிற்சியானது, உடலில் உள்ள கலோரிகளை எரிக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றது. அவ்வகையே, யோகா பயிற்சியினால் நம் நினைவாற்றல் அதிகரிப்பதுடன்,  வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி எடை இழப்புக்குப் பங்களிக்கிறது. மேலும், இது சீரான உடல் மற்றும் மனதைப் பாதுகாக்க மேம்படுத்துகிறது. எனவே, ஒருவரின் உடற்பயிற்சி நிலைகள் மற்றும் தனிப்பட்ட விருப்பங்களின் அடிப்படையில் எடை இழப்பு அணுகுமுறையைத் தேர்ந்தெடுப்பது சிறந்ததாகும்.