திறனை வளர்த்துக் கொள்ள ஒரு அறிய வாய்ப்பு !

திறன் தகுதியை வளர்த்துக் கொள்ள இளைஞர்களுக்கு ஒரு அறிய வாய்ப்பாக எஸ் என் ஆர் சன்ஸ் அறக்கட்டளை கீழே இயங்கும் கோவை வட்டமலைப்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா அட்வான்ஸ் ட்ரெய்னிங் இன்ஸ்டிடியூட் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து மூன்று மாதம் MIG/ MAG/ GMAW வெல்டிங் பயிற்சியை வருகின்ற டிசம்பர் 18 ஆம் தேதி 100 சதவீதம் எந்தவிதமான கட்டணமும் இல்லாமல் பயிற்சி அளிக்கப்படுகிறது.

மேலும் பயிற்சி பெறும் வெளியூர் மாணவர்களுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு ஆகிய அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். உள்ளூர் மாணவர்களுக்கு பயிற்சியின் முடிவில் ரூபாய் 7500 ஊக்கத்தொகையாக வழங்கப்படும். மூன்று மாத பயிற்சிக்கு பிறகு முன்னணி நிறுவனங்களில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதால் 100 சதவீதம் அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விபரங்களுக்கு: 9600422851 / 7373728566 www.srati.in