இந்துஸ்தான் கல்லூரியில்  மின்சார வாகன தயாரிப்புக்கான மையம் துவக்கம்! 

இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் மின்சார வாகனத்திற்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையத்தின் துவக்கவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக டிவைஸ் எலக்ட்ரானிக்ஸ் நிர்வாக இயக்குநர் சேகர் மலானி கலந்து கொண்டு மின்சார வாகன மையத்தைத் துவக்கி வைத்தார். அவர் பேசுகையில், 2030 வருடத்தைக் கணக்கிடும்போது மின்சார வாகனங்களைப் பற்றிய பேட்டரி, மோட்டார், வாகன மென்பொருள் குறித்து நன்கு தெரிந்த வல்லுநர்கள் அதிகம் தேவைப்படுகின்றனர். அதன் வகையில் இம்மையமானது மின்சார வாகன தொழில்நுட்பத்தில் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கவும், திறனை மேம்படுத்துவதற்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று கூறினார்.

இதை தொடர்ந்து, ஹரிதா மொபிலிட்டி நிர்வாக இயக்குநர் பிரசாந்த் குமார் பேசுகையில், மின்சார வாகனத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மின்சார வாகனங்களில் ஏற்படும் பழுதை எவ்வாறு திறம்படக் கையாளுவது என்பதை மாணவர்களுக்கு இத்திறன் மேம்பாட்டு மையத்தின் மூலம் பயிற்சிகள் கொடுக்கப்படம். மேலும் மாணவர்களுக்கு இன்டெர்ன்ஷிப், ப்ராஜெக்ட் ஆகியவையும் வழங்கப்பட உள்ளன என்று கூறினார் .

மேலும், கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி பேசுகையில்; நவீன தொழில்நுட்பத்தைச் செய்முறை பயிற்சியின் மூலம் மாணவர்கள் பயன்பெற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு  இம்மையம் துவக்கப்பட்டது என்று கூறினார்.

விழாவிற்கு கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி கருணாகரன்,  முதல்வர் ஜெயா, டீன் மகுடேஸ்வரன், பேராசிரியர்கள் மற்றும் அனைத்து மாணவர்கள் கலந்து கொண்டனர்.