தினமும் உணவுக்கு பின் இனிப்பு எடுத்து கொண்டால்…என்னென்ன விளைவுகள்?

பெரும்பாலான நபர்களுக்கு உணவு சாப்பிட்ட  பிறகு, ஏதேனும் இனிப்பு சாப்பிட தோன்றும். அதனால்  ஏற்படும் விளைவுகள் என்ன? அதை எப்படி கட்டுப்படுத்துவது என்பது பற்றி இங்கே காணலாம்..

உணவு உண்ட பிறகு, இனிப்புகளை சாப்பிட விரும்புவது ஒரு பொதுவான நிகழ்வாகும். உணவு உண்ட பிறகு நம்முடைய உடலின் மிக முக்கிய செயல்பாடு என்றால் அது செரிமானம் அடைவது தான். நாம் உண்ட உணவு முழுமையாக ஜீரணமடைய வேண்டுமானால், அதற்கும்  நிறைய ஆற்றல்கள் உடலில் தேவைப்படுகின்றன. அதற்கான  உடனடி சக்தியை சக்கரையின் மூலம் நம்மால் பெற முடியும். எனவே தான், முழு உணவு சாப்பிட்ட பிறகு இனிப்பை சாப்பிட நம்மை தூண்டுகிறது.

எடை அதிகரிப்பு: 

உங்கள் உடல் எடை ஏன் அதிகரிக்கிறது? - 5 ஆச்சரிய காரணங்கள் - BBC News தமிழ்

உணவுக்குப் பிறகு தொடர்ந்து இனிப்புகளை உட்கொள்வது காலப்போக்கில் அது உடல் எடையை அதிகரிப்பதற்கு வழிவகுக்கிறது.

இரத்தச் சர்க்கரைக் கட்டுப்பாடு: 

உணவுக்குப் பிறகு, குறிப்பாக கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ள உணவுக்குப் பிறகு, இனிப்பு சாப்பிடுவதால் நம் உடலில்  இரத்த சர்க்கரை அளவு உயரக்கூடும். இதனை எதிர்ப்பதற்கு, நம் உடல் இன்சுலினை வெளியிடுகிறது, இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவதற்கு வழிவகுக்கிறது.

பல் ஆரோக்கியம்: 

சர்க்கரை மற்றும் அமிலங்கள் அதிக அளவில் நிறைந்த இனிப்புகளை தொடர்ந்து எடுத்துக்கொண்டால் உங்களின் பல் ஆரோக்கியத்தை சேதப்படுத்துகிறது. ஏனெனில் சர்க்கரை,  தீங்கு விளைவிக்கும் ஓரல் பாக்டீரியாவுக்கு வழிவகுக்கிறது.

ஊட்டச்சத்து குறைபாடு: 

சத்தான உணவிற்குப் பிறகு  நீங்கள் தொடர்ந்து இனிப்புகளை உட்கொண்டு வருவதால், உங்கள் உடல் செயல்பாட்டிற்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை இழக்க நேரிடும்..

கட்டுப்பாடு:

சத்தான உணவு :

Mindful eating dominates as consumers seek rich nutritious profiles

செயற்கை இனிப்பு மற்றும் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக மிகக் குறைவான அளவில் உலர் பழங்கள், ஃபிரஷ்ஷான பழங்கள், வெல்லம், தேன், பெர்ரி, முலாம்பழம் போன்ற இயற்கையான இனிப்பு உணவுகளை அனுபவிக்க முயற்சிக்கவும்.

சீரான உணவு திட்டம்:

புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகளுடன்  உணவை நன்கு சமநிலைப்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.  சீரான உணவு பழக்கங்கள் இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்தவும், உணவுக்குப் பின் குறைக்கவும் உதவுகிறது.

பற்களை துலக்குதல்: 

உங்கள் பல் துலக்கினால் கொரோனா வைரஸை கடத்த முடியும் - DentalDost

உணவுக்குப் பிறகு, பல் துலக்குதல் அல்லது மவுத்வாஷ் பயன்படுத்துவதால் இனிப்பு சாப்பிட விரும்புவதைத் தடுக்கலாம். மேலும், உணவிற்கு சர்க்கரை சேர்க்காத இனிப்பற்ற பபிள் கம் போன்றவற்றை மென்று சாப்பிடுவது சர்க்கரையின் கலோரிகள் இல்லாமல் லேசான இனிப்பை வழங்குகிறது. இது  இனிப்பு சாப்பிடுவதிலிருந்து உங்களை திருப்திப்படுத்த உதவுகிறது.

இதனை தொடர்ந்து பின்பற்றி வருவதால், சர்க்கரை மற்றும் இனிப்பு சுவையை தேடுவதிலிருந்து உங்களை கட்டுப்படுத்தி கொள்ளமுடியும்.