லெமன் ஜூஸில் உள்ள சில முக்கிய நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள்!

லெமன் ஜூஸ் என்பது ஒரு வகையான சிட்ரஸ் பழத்தின் சாறு ஆகும். பொதுவாகவே லெமனில் வைட்டமின் சி,  நார்ச்சத்து மற்றும் பல ஆரோக்கியமான நன்மைகள் நிறைந்துள்ளன. அந்தவகையில்  லெமன் ஜூஸை குடிப்பதால் வரும் சில நன்மைகள் மற்றும் அதிக அளவில் குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி இங்கே காணலாம்;

வைட்டமின் சி நிறைந்தது: 

லெமன் ஜூஸில் வைட்டமின் சி அதிக அளவில் நிரம்பியுள்ளது, இது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதோடு, வழக்கமாக வர கூடிய சளி மற்றும் பிற நோய்களைத் தடுக்க உதவுகிறது.

எடை குறைப்பு :

வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள லெமன் ஜூஸை குடிப்பதால் உடலில் உள்ள கலோரி அளவைக் குறைத்து உடல் எடையைக் கட்டுப்படுத்துகிறது.

சிறுநீரக கல் தடுப்பு:

லெமன் ஜூஸில் உள்ள சிட்ரேட் சிறுநீரில் உள்ள சிட்ரேட் அளவை அதிகரிப்பதன் மூலம் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கிறது.

இதய ஆரோக்கியம்:

லெமனில் நிறைந்துள்ள நார் சத்தானது உடல் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைகிறது.

செரிமானத்திற்கு உதவும்:

லெமன் ஜூஸில் சிட்ரிக் அமிலம் நிறைந்துள்ளதால்,  செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும், இது அஜீரணம் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற அறிகுறிகளிருந்தும் விடுவிக்கிறது.

லெமன் ஜூஸ் ஏற்படுத்தும் பக்கவிளைவுகள்

லெமன் ஜூஸ் குடிப்பது பொதுவாக நல்லது  ஆனால் அது சிலரின் உடலிற்கு பொருந்தாது.  அதன் வகையில்,

  • சிட்ரஸ் பழங்களுக்கு ஒவ்வாமை உள்ளவர்கள் லெமன் ஜூஸ் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
  • சிட்ரஸ் பழங்கள் பெரும்பாலும் ஒற்றைத் தலைவலியை தூண்டுகிறது. எனவே ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுபவர்களும் லெமன் ஜூஸை தவிர்க்க வேண்டும்.
  • லெமனில் அமிலத்தன்மை இருப்பதால், சில சமயங்களில் பல் சிதைவுக்கு வழிவகுக்கிறது.
  • டான்சில் பிரச்னை உள்ளவர்கள் லெமன் ஜூஸ் குடிப்பதை முற்றிலும் தவிர்த்து கொள்ள வேண்டும். ஏனெனில், இது அதிக தொண்டை வலியை ஏற்படுத்த தூண்டுகிறது.