உற்சாகமான நாட்டுப்புற கலைகளோடு வேதபாடசாலையில் ‘திருவீதி உலா’ 

ஆர்.எஸ். புரத்தில் அமைந்துள்ள வேதபாடசாலை ஸ்ரீ அன்னபூரணி, யோக நரசிம்மர் சன்னதியில் நவராத்திரி விழா விஷேசமாக கொண்டாடப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை திருவீதி உலா விமர்சையாக நடைபெற்றது.

இந்த திருவீதி உலாவில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை சேர்ந்த புகழ்பெற்ற நாட்டுப்புற கலைஞர்கள் பலர் பங்கேற்று சேவையாட்டம், கட்டைக்கால் ஆட்டம், கொம்பு, சங்கு, பம்பை, டோலு குனித்தா உள்ளிட்ட நாட்டுப்புற கலைகளால் திருவீதி உலாவை அழகுபடுத்தினர்.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உலாவை கொடியசைத்து துவங்கி வைத்தார். மேலும், வேதபாடசாலை நிர்வாக அறங்காவலர் ரவி சாம் தலைமை வகித்தார். உடன் ஏரளமான பக்தர்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.