கலாம் மக்கள் அறக்கட்டளையின் சார்பில் சிறுவர்களுக்கு பாராட்டு விழா

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த தினத்தை முன்னிட்டு கோவை கலாம் அறக்கட்டளை, நேரு நகர் அரிமா சங்கம் மற்றும் ஃபேரா அமைப்பு ஆகியவை இணைந்து ஸ்கேட்டிங் விளையாடும் சிறுவர், சிறுமிகளுக்கு கொடிசியா மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

சக்சஸ் அபினயா ஸ்கேட்டிங் அகாடமியில் பயிற்சி பெற்று வரும் இளம் ஸ்கேட்டிங் சாதனையாளர்களை பாராட்டும் விதமாக நடைபெற்ற இதில், ஸ்கேட்டிங் விளையாட்டில் ஈடுபட்டு வரும் சிறுவர், சிறுமிகளுக்கு கலாம் நினைவு பரிசு மற்றும் அவரது உருவ படம் வழங்கப்பட்டது.

கலாம் மக்கள் அறக்கட்டளையின் நிறுவனரும், அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய துணை தலைவருமான செந்தில் குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அபினயா ஸ்கேட்டிங் அகாடமியன் செயலாளர் ரகுபதி, நேரு நகர் அரிமா சங்கத்தின் தலைவர் மோகன்ராஜ், செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கலாம் மக்கள் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் கார்த்திக் பாலசுப்பிரமணி, பால்ராஜ், எழுத்தாளர் கனலி என்கிற சுப்பு, இன்ஜினியர் தேஜஸ்வினி, மீனாகுமாரி கிரீஸ் மற்றும் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் அவர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.