லியோ படத்தில் 13 சென்சார் கட் 2 மணி 44 நிமிடங்கள் காட்சி அளவு

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் ட்ரைலர் ரிலீஸ் ஆனதிலிருந்து சமூக வலைத்தளங்கள் முழுவதும் அப்படத்தை பற்றி தான் பேச்சு. லோகேஸ் கனகராஜ் இயக்கிய இப்படம் தீபாவளியில் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் சென்சார் கட்,  படத்தின் நேரம் போன்றவை அதிகாரபூர்வமாக வெளிவந்துள்ளது. சென்சார் போர்டு இப்படத்திற்கு U/A சான்றிதழை தந்துள்ளது. இப்படத்தில் புகை மற்றும் போதைப்பொருட்கள், ஆபாச வார்த்தைகள், ரத்தம் தெறிக்கும் காட்சிகள் போன்றவை நீக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 13 சென்சார் கட் செய்யப்பட்டுள்ளது. 164 நிமிடங்கள் (2 மணி 44 நிமிடங்கள்) நேரம் ஓடக்கூடிய இப்படம் வன்முறை மிகுந்த படம் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில்  த்ரிஷா, மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், சஞ்சய் தத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்தின் டிரெய்லர் மூலம்  இது ஹாலிவுட் திரைப்படமான எ ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் (2005) மூலம் ஈர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.