பாரதியார் பல்கலைக்கழக இறகுப்பந்து போட்டியில் பி.எஸ்.ஜி கல்லூரி வெற்றி

பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரி மாணவர்களுக்கான இறகுப்பந்து போட்டி இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்தது. இதில் 45 கல்லூரிகளிலிருந்து 350 மாணவர்கள் பங்கேற்றனர்.

செவ்வாய்க்கிழமை தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் பி.எஸ்.ஜி.கலை அறிவியல் கல்லூரி முதலிடத்தையும், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி இரண்டாமிடத்தையும், கே.பி.ஆர். கலை அறிவியல் கல்லூரி மூன்றாமிடத்தையும், இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி நான்காமிடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.

இதன் பரிசளிப்பு விழாவில் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் பொன்னுசாமி மற்றும் பாரதியார் பல்கலைக் கழக உடற்கல்வி இயக்குநர் ராஜேஷ்வரன் ஆகியோர் கலந்துகொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

மேலும் இவ்விழாவில் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி செயலாளர் சரஸ்வதி, நிர்வாக செயலாளர் பிரியா, பாரதியார் பல்கலைக் கழக உடற்கல்வித்துறை பேராசிரியர் அண்ணாதுரை, பொள்ளாச்சி ராமு கலை அறிவியல் கல்லூரி இயக்குநர் பெரியசாமி மேலும் பல்வேறு கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.