இந்தஸ்தான் கல்லூரியில் குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் 

இந்தஸ்தான் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் பெருந்துறை குறுமைய அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

சென்னிமலை, அம்மாபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி சார்பாக, பெருந்துறை குறுமைய அளவிலான பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் ஈங்கூரில் அமைந்துள்ள இந்துஸ்தான் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் 21.08.2023 முதல் 25.08.2023 வரை நடைபெற்றது.

இப்போட்டியில் பெருந்துறை குறுமையத்திற்குட்பட்ட 80க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 3000 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இதில் செஸ், கேரம், டெனிகாய்ட், கபடி, கோ-கோ, பூப்பந்து ஆகிய போட்டிகள் நடைபெற்றது.

இப்போட்டியினை இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் சரசுவதி, நிர்வாக அறங்காவலர் பிரியா ஆகியோர் துவக்கிவைத்தனர். இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் ராமன், அம்மாபாளையம் அரசு உயர் நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் குமார், பள்ளியின் பெற்றோர் ஆசிரிய கழகத்தலைவர் கதிரேசன், உடற்கல்வி ஆசிரியர் ரத்தினகுமார், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பிரசாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.