செயின்ட்பால்ஸ் மகளிர் கல்லூரியில் வரவேற்பு விழா

கோவை, செயின்ட்பால்ஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளின் வரவேற்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகச் சிமியோ சொல்யூஷன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாளர் தீபா கலந்து கொண்டு, தகவல் தொழில் நுட்பத்துறையின் முக்கியத்துவம், வேலைவாய்ப்பு, பெண்கள் முன்னேற்றம் குறித்தும் மாணவிகளை உற்சாகப்படுத்தி தனது கருத்துக்களைக் கூறி ஊக்கப்படுத்தினார்.

இதில் செயின்ட்பால்ஸ் மகளிர் கல்லூரியின் தாளாளர் ரம்யா கிருஸ்டி, முதல்வர் ஜீலியானா ஞானசெல்வி மற்றும் பேராசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.