கற்பகம் பல்கலையில் கல்வி கடன் வழங்கும் முகாம்

கோவை, ஈச்சனாரியில் உள்ள கற்பகம் பல்கலையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் கல்வி கடன் வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் மாணக்கர்களுக்கு கல்விகடன் வழங்குதற்கான ஒப்புதல் ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் ஆகியோர் வழங்கினார்கள்.

இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் கூறுகையில், கோவையில் பல்வேறு நலத்திட்ட முகாம்கள் தமிழ்நாடு அரசின் சார்பில் நடத்தப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் வழிகாட்டுதலின்படி மாபெரும் கல்வி கடன் வழங்கும் முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டது.

முதற்கட்டமாக உடுமலை, மடத்துக்குளம், பொள்ளாச்சி வால்பாறை, ஆனைமலை ஆகிய வட்டத்திற்குட்பட்ட மாணவ மாணவியர்களுக்கு மாபெரும் கல்வி கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது. இரண்டாவது முகாம் கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், சூலூர் வட்டத்திற்குட்பட்ட மாணவ மாணவியர்களுக்கு கற்பகம் பல்கலைகழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறுகின்றது.

இந்தியாவிலேயே அதிக அளவிலான மாணக்கர்கள் உயர்கல்வி பயில்வதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. அதன்வகையில் கோவையில் அதிக கல்வி நிறுவனங்கள் உள்ளன. இருந்தபோதிலும், 12வது படித்து முடிக்கும் ஒவ்வொரு மாணக்கர்களும் கட்டாயம் உயர்கல்வி பெறவேண்டும். அதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. குறிப்பாக நான் முதல்வன் திட்டம், கல்லூரி கனவு திட்டம், உயர்வுக்கு படி, உள்ளிட்ட திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுகின்றது.

மேலும், இம்முகாமில் 200 மேற்பட்ட தன்னர்வலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். கல்விகடன் பெறுதவற்கு விண்ணப்பிக்க தேவையான சான்றிதழ்களை, வருவாய்த் துறையின் சார்பில் இ-சேவை மையம் மூலமாக இம்முகாமிலே வழங்கிட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்களை பரிசீலித்து கல்வி கடன் வழங்கும் வங்கிகளுக்கான தனித்தனி அரங்குகள் இந்த முகாமில் அமைக்கப்பட்டுள்ளது., எனத் தெரிவித்தார்.

இம்முகாமில், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆஷிக் அலி, வருவாய் கோட்டாட்சியர் பண்டரிநாதன், கற்பகம் கல்வி குழுமங்கள் தலைவர் இராச.வசந்தகுமார், வேளாண்மை பல்கலைக கழக முன்னாள் துணை வேந்தர் ராமசாமி, தமிழ்நாடு தொழில் மற்றும் வர்த்தகதுறை மூத்த ஆலோசகர் / மாவட்ட முன்னோடி வங்கி முன்னாள் மேலாளர் வணங்காமுடி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராஜ்குமார், மற்றும் துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.