இந்துஸ்தான் கல்லூரி மாணவர்கள் இணைய வழி கற்றலில் சாதனை

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் அமைந்துள்ள இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியானது, ஸ்வயம்- என்.பி.டி.இ.எல் (SWAYAM-NPTEL), கோர்சேரா (COURSERA) , எட்க்ஸ் (eDX) போன்ற பல்வேறு MOOC தளங்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சுய-படிப்பு திட்டங்களை வழங்கும் முயற்சியைத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் கல்லூரியில் இருந்து 800 க்கும் மேற்பட்ட மாணவர்கள் NPTEL தேர்வுக்கு ஜனவரி-ஏப்ரல் 2023 அமர்வில் இன்டர்னெட் ஆஃப் திங்ஸ், கான்கிரீட் கட்டுமானங்களைப் பராமரித்தல் மற்றும் பழுதுபார்த்தல், ஆட்டோமோட்டிவ் அமைப்புகளின் அடிப்படைகள், சமூக வலைப்பின்னல்கள், உயிர் ஒளியியல், மெம்ப்ரேன் தொழில்னுட்பம், கணினி வலைப்பின்னல் மற்றும் இணைய நெறிமுறை, கிளவுட் கம்ப்யூட்டிங் போன்ற பல்வேறு பாடங்களில் பதிவு செய்துள்ளனர்.

இத்தேர்வில், 25 மாணவர்கள் தேசிய அளவில் முதலிடம் பெற்றனர், 3 மாணவர்கள் எலைட்+தங்கம் அந்தஸ்தைப் பெற்றனர், 81 மாணவர்கள் எலைட்+வெள்ளி மற்றும் 219 மாணவர்கள் எலைட் அந்தஸ்தைப் பெற்றனர், 327 மாணவர்கள் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்றுள்ளனர், மொத்தம் 1534  மாணவ மாணவியர்கள் வெற்றி பெற்று பயனடைந்துள்ளனர்.

இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், இணை செயலாளர் பிரியா சதீஷ் பிரபு, இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி கருணாகரன், கல்லூரி முதல்வர் ஜெயா, கல்லூரியின் டீன் மகுடேஸ்வரன்,கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் துறைத் தலைவர் சங்கர் ஆகியோர் என்.பி.டி.இ.எல் படிப்பில் சாதனை படைத்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைப் பாராட்டினர்.