உயிர் காக்க ‘உயிர் அமைப்பு’ தமிழக முதல்வரால் துவக்கப்பட்டது

சாலை விபத்துகளினால் உண்டாகும் உயிரிழப்பு, உடல் ஊனம் ஆகியவற்றை தவிர்க்க மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவையில் ‘உயிர்’ எனும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. கொடிசியா வளாகத்தில் நடைபெறும் அமைப்பின் துவக்க விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்றனர்.

துவக்க விழாவில் உயிர் அமைப்பின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அரசு அதிகாரிகளுடன் கையெழுத்திடும் நிகழ்வு நடைபெற்றது.

தொடர்ந்து உயிர் சேதம் தவிர்க்க எல்லா வகைகளிலும் ஒத்துழைப்போம் என கோவையின் பொது நல அமைப்புகள், தொழில் அமைப்புகள், நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், ஆன்மீக அமைப்புகள் பிரிநிதிகள் ஒன்றிணைந்து உறுதியேற்பு எடுத்துக்கொள்ளும் மஹாசங்கல்பம் எனும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக விழாவின் மேடை அருகே வைக்கப்பட்டிருந்த விபத்துகளை தடுக்கும் வழிமுறைகளான அமைப்பை முதல்வர் பார்வையிட்டார். உயிர் அமைப்பை குத்துவிளக்கு ஏற்றி முதல்வர் துவக்கி வைத்தார்.

கல்விக்கூடங்களில் சாலை விழிப்புணர்வை உண்டாக்க ‘குட்டி காப்ஸ்’, தொழிற்சாலைகள், அலுவலகங்களில் விழிப்புணர்வை உண்டாக்கும் பல்வேறு புதிய திட்டங்கள், இந்த அமைப்பு பிற நகரங்களுக்கு விரிவுப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சாலை விபத்துகளை குறைக்க முக்கிய பிரமுகர்களும், முதன்மையான நிறுவனங்களும், உள்ளூர் அமைப்புகளும், கல்வி நிலையங்களும் அரசுடன் ஒன்றிணைந்து செயல்பட இருப்பது இந்தியாவிலேயே முன்மாதிரியான முயற்சி.

இந்தியாவில் அதிகம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழப்பதாக ஆய்வுகள் வெளியாகியுள்ளது.
சாலை விபத்துகள் நடைபெறுவதில் இந்தியாவில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. தமிழகத்தில் ஆண்டுக்கு சுமார் 15,000 பேர் சாலை விபத்துகளில் மரணமடைவதாக ஆய்வுகள் கூறுகிறது. இதில் தமிழகத்தில் அதிகம் விபத்து நடைபெறும் நகரங்களில் கோவை இரண்டாவது இடம் பெறுகிறது. இதற்கு முக்கிய காரணம் மிதமிஞ்சிய வேகம், மது அறிந்து விட்டு வாகனங்கள் ஓட்டுவது என 70 சதவீத விபத்துகளுக்கு காரணம் என்ன புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இந்த விபத்து நிலை தடுக்கும் வகையில், விபத்துகளே இல்லாத கோவை உருவாக்கும் நோக்கத்துடன் நகரின் தொழில் நிறுவனங்கள், மருத்துவர்கள், தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பின் தலைவராக சஞ்சய் ஜெயவர்த்தன வேலு நிர்வாக அறங்காவலராக கங்கா மருத்துவமனை மருத்துவர் ராஜசேகரன் மற்றும் நிர்வாகிகளாக முன்னாள் சிபிஐ இயக்குனர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் இந்த அமைப்பில் இணைந்து பணியாற்றுகின்றனர்.

கடந்தாண்டு நாட்டில் 1,83, 350 விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். அதன்படி, ஒவ்வொரு 3 நிமிடங்களுக்கும் ஒருவர் உயிரிழக்கின்றனர்.

டெங்கு, கால்ரா உள்ளிட்ட நோய்களில் ஏற்படும் உயிரிழப்புகளை விட 10 மடங்கு அதிகமாக சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர்.

2016 படி தமிழகத்தில் 15,642 சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். சென்னை முதலிடத்திலும் , கோவை 2வது இடத்திலும், திருச்சி 3 வது இடத்திலும் உள்ளது.