கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் புதிய சாதனை!

விராட் கோலி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 10,000 ரன்கள் கடந்த வீரர் என்ற பெருமை பெற்றார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆடும் முன் கோலி ஒருநாள் போட்டிகளில் பத்தாயிரம் ரன்களை எட்ட 81 ரன்கள் எடுக்க வேண்டியதிருந்தது. இந்த போட்டியில் கோலி நிலைத்து நின்று ஆடி 81 ரன்களை கடந்தார். அப்போது ஒருநாள் போட்டிகளில் பத்தாயிரம் ரன்களை கடந்த ஐந்தாவது இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றார்.இதுவரை இந்தியாவில் சச்சின், கங்குலி, டிராவிட் மற்றும் தோனி மட்டுமே பத்தாயிரம் ரன்களை கடந்த வீரர்கள் ஆவர்.

இந்த சாதனையாளர்கள் பட்டியலில் இணைந்தார் கோலி. மேலும், உலகளவில் பத்தாயிரம் ரன்களை கடந்த 13வது பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் பெற்றார்.உலகளவில் அதிவிரைவாக பத்தாயிரம் ரன்களை கடந்த பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் செய்தார். இதற்கு முன் சச்சின் 259 இன்னிங்க்ஸ்களில் கடந்து இருந்தார். தற்போது கோலி 205 இன்னிங்க்ஸ்களில் பத்தாயிரம் ரன்களை கடந்துள்ளார்.