வி.எல்.பி கல்லூரியில் ராக்கிங் எதிர்ப்பு விழிப்புணர்வு

கோவை, வி.எல்.பி.ஜானகியம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் ராகிங் எதிர்ப்புக் குழு இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான ராக்கிங் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரித் துணை முதல்வர் வாசுதேவன் முன்னிலை வகித்தார். கோவை, குனியமுத்தூர், காவல் நிலையக் காவல் துணை கண்காணிப்பாளர்,மணிகண்டன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அவர் தனது உரையில், ராகிங்கால் ஏற்படும் உளவியல் மற்றும் உடல் ரீதியான பாதிப்புகளை குறித்தும், ராகிங் செய்தால் அதற்கான சட்டத்தில் உள்ள தண்டனைகளை குறித்தும் மாணவர்களுக்கு விளக்கினார்.

மூத்த மாணவர்கள் எந்த ஒரு ராகிங்கில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும், வளாகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் முதலாம் ஆண்டு மாணவர்களுடன் நட்புடன் பழகவும் கேட்டுக் கொண்டார். விழிப்புடன் இருப்பதற்காக நிறுவனத்தின் நிர்வாகிகளைப் பாராட்டினார்.