அமிர்த வித்யாலயம்  பள்ளி  போட்டியில் வெற்றி

கோவை சுகுணா இன்டர்நேஷனல் பள்ளி நடத்திய ஸ்ரீ ராமசுவாமி நூற்றாண்டு விழா அண்மையில் நடைபெற்றது.

இதில்  திருப்பூர் அமிர்த வித்யாலயம் சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள்  பஜன் போட்டியில் வெற்றிப் பெற்றனர்.

இவ்விழாவில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். சாதனைப் படைத்த மாணவர்கள் பள்ளிக்கு விருதுகளைக்  கொண்டு வந்தனர்.

பள்ளி நிர்வாகம்,முதல்வர், பணியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.