கோவை புனித மைக்கேல் மேல்நிலைப் பள்ளியில் சிகரத்தை நோக்கி நிகழ்ச்சி

கோவை, புனித மைக்கேல் மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற “சிகரத்தை நோக்கி” நிகழ்வில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் முதல் மூன்று மதிப்பெண்களை பெற்ற மாணவர்களுக்கு Adwavess Advertising சார்பாக சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

அருகில் பள்ளி தாளாளர் ஏ. ஹென்றி டானியல், Adwavess Advertising-ன் நிர்வாக இயக்குனர் ஜெரால்டு ஜெயபிரகாஷ், முதன்மை குரு கோவை மறை மாவட்டம் ஜான் ஜோசப் ஸ்டானிஸ், கோயம்புத்தூர் பிஷப் எல். தாமஸ் அக்வினாஸ் M.A., D.C.L., திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ஏ. சக்திவேல் ஆகியோர் உள்ளனர்.