நேரு விமானவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா

கோவை, குனியமுத்தூர் நேரு விமானவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினர்களாக கோவை லீப் கிரீன் எனர்ஜி பிரைவேட் லிமிடெட், துணைத் தலைவர் நந்தகுமார், கோவை, பன்னாட்டு விமானநிலைய, ஜாயின்ட் ஜெனரல் மேனேஜர் ரவிச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

இவர்களுடன் நேரு குழுமத்தின் நிர்வாகத் தலைவர்  பி.கிருஷ்ணதாஸ், முதன்மை செயல் அதிகாரி  பி.கிருஷ்ணகுமார், கல்லூரி முதல்வர் பி.ஆர்.பாலாஜி மற்றும் துறைத்தலைவர் திரு.ஆர். சிங்காரவடிவேலு ஆகியோர் உடனிருந்து  முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்றினர்.