டவுன் சிட்டி டெவலப்பர்ஸின் குடியிருப்பு திட்டங்களில் ஒன்றான மெகா சிட்டி கோவையில் துவக்கம்!

வீடு விற்பனை நிறுவனமான டவுன் அண்ட் சிட்டி டெவலப்பர்ஸ் தனது அடுத்த குடியிருப்பு வீடுகள் அடங்கிய ப்ராஜெக்ட்டை துவங்கியுள்ளது.

கே.ஜி. குழுமத்தின் அங்கமான டவுன் அண்ட் சிட்டி டெவலப்பர்ஸ், மெகா சிட்டி என்ற உயர்தரத்தில் அமைந்துள்ள இந்த குடியிருப்பு வளாகம் கோவையில் முக்கிய பகுதிகளில் ஒன்றான காமராஜர் ரோட்டில் அமைந்துள்ளது.

இந்த குடியிருப்பின் துவக்க விழாவானது பிரம்மாண்டமான முறையில் இந்த வருடம் ஜூன் 23 இல் துவங்கி 24, 25 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.

இந்த நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க குடியிருப்பு திட்டங்களில் ஒன்றான மெகா சிட்டி கோவையின் மிக முக்கிய இணைப்பு சாலைகளான திருச்சி சாலை மற்றும் அவிநாசி சாலை இரண்டுக்கும் மிக அருகாமையில் எளிய முறையில் அணுகும் வசதியில் அமைந்துள்ளது.

மேலும், கோவையின் மிக முக்கியமான கல்வி நிறுவனங்கள், மருத்துவ வசதிகள், ஃபன் மால் மற்றும் டைட்டில் பார்க் ஆகியவை மிக எளிதில் அடைய கூடிய தொலைவில் உள்ளது. இந்த மெகா சிட்டி குடியிருப்பானது இன்றைய நவீன கால வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு உயர்தரமான வசதிகளுடன் எதிர்கால வசதிகளை கருத்தில் கொண்டும் திட்டமிடப்பட்டுள்ளது.

இக்குடியிருப்பு 13 தளங்கள் கொண்ட இரண்டு டவர்களுடன் ஒன்று மற்றும் இரண்டு படுக்கையறைகள் வசதிகள் கொண்ட வீடுகள் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 203 வீடுகள் கொண்ட இக்குடியிருப்பானது நல்ல காற்றோட்டமாகவும் மற்றும் இயற்கையான வெளிச்சத்துடனும் உள்ளவாறு மிக கவனமாக திட்டமிடப்பட்டுள்ளது.

மிக ஆடம்பரமான வசதிகளை உள்ளடக்கிய இந்த வளாகம் குடியிருப்பாளர்கள் இதனை உணரும் விதமாக அனைத்து வசதிகளும் மற்றும் தரமான பொருட்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கோவையின் மிக வேகமாக வளர்ந்து வரும் குடியிருப்பு பகுதிகளில் ஒன்றான காமராஜர் ரோட்டில் அமைந்துள்ள இந்த மெகா சிட்டி ப்ராஜெக்ட் முதலீட்டிற்கு மிகவும் ஏற்றதாகும். மேலும் நீண்ட கால ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய மற்றும் தவற விட கூடாத ப்ராஜெக்ட் ஆகும்.

ரியல் எஸ்டேட் துறையில் முன்னணியில் உள்ள டவுன் அண்ட் சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவனம் கோவை முக்கிய  பகுதியில் மிகச்சிறந்த வீடுகளை கட்டி விற்பனை செய்வதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. மிகச் சிறந்த தரம் புதுமையான வடிவமைப்பு மற்றும் வாடிக்கையாளர்களின் திருப்தி ஆகியவற்றையே இந்நிறுவனம் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

1932 முதல் 90 ஆண்டுகளுக்கு மேலாக வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்ற கே.ஜி. குழுமங்களின் ஒரு அங்கமான டவுன் அண்ட் சிட்டி டெவலப்பர்ஸ் உயரிய கட்டிட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அனைத்து தரப்பு பொதுமக்களும் பயன்பெறும் வகையில் தரமான வீடுகளை குறைந்த விலையில் அளிப்பதில் முன்னணியில் உள்ளது.

டவுன் & சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவனம் இதுவரை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் சொந்த வீடு கனவுகளை நிறைவேற்றி உள்ளது. இந்நிறுவனம் இதுவரை கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒன்பது ப்ராஜெக்ட் கட்டி முடித்து ஒப்படைத்துள்ளது மேலும் இரண்டு ப்ராஜெக்ட் கட்டி முடியும் தருவாயில் உள்ளது.

ஒப்பிலாத வடிவமிடல் மூலம் வாடிக்கையாளர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் குறைந்த விலையில் வீடுகளை விற்பனை செய்வதில் முன்னணியில் உள்ளது. மேலும் வீடு முன் பதிவு முதல் வங்கி கடன் வசதி மற்றும் இதர வசதிகளுடன் கட்டி முடித்து ஒப்படைப்பது வரையிலான அனைத்து சேவைகளையும் செய்து வருகிறது.

மெகா சிட்டி பற்றிய கூடுதல் தகவலுக்கு, திட்ட இணையதளத்தில் பார்க்கவும் www.townandcitydevelopers.com

அல்லது டவுன் மற்றும் சிட்டி டெவலப்பர்களை 76676 99999 / 76674 66666. என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.