Audi- Bmw – Benz எந்த கார் வேண்டுமானாலும் டாக்சி போல் எடுத்துட்டு போங்க..!

கோவையில் விலை உயர்ந்து Luxury கார்களை டாக்சியாக வாடகைக்கு விட்டு வருகிறார்கள் கே.கே டிராவல்ஸ் நிறுவனத்தார்.

கோவை சித்தாபுதூர் பகுதியில் அமைந்துள்ளது கே.கே.டிராவல்ஸ். இந்த நிறுவனத்தின் உரிமையாளர் கிருஷ்ணகுமார். இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக டிராவல்ஸ் தொழில் நடத்தி வருகிறார். வழக்கம் போன்ற டிராவல்ஸ் தொழிலை கடந்து இவர் டிராவல்ஸ் துறையில் கோவையில் வித்தியாசமான முறையை கையாண்டு வருகிறார்.

பொதுவாக விலை உயர்ந்து கார்களை வாடகைக்கு கொடுக்கும் நிறுவனங்கள் சென்னையில் தான் இருக்கும். கோவையிலும் இப்படியான நிறுவனத்தை தொடங்கியுள்ளார் கிருஷ்ணகுமார். இவரிடம் பென்ஸ், ஆடி, மினி கூப்பர், ஜாகுவார் உள்ளிட்ட பல்வேறு வகையான விலை உயர்ந்து கார்கள் உள்ளன. இவையல்லாமல் மோரிஸ் என்ற விண்டேஜ் வகை கார்களும் உள்ளன.

தனது தொழில் குறித்து கிருஷ்ணகுமார் கூறுகையில், “கோவையில் நாங்கள் மட்டுமே விலை உயர்ந்து கார்களை வாடகைக்கு விட்டு வருகிறோம். திருமண நிகழ்வு, முக்கிய நபர்கள் வருகை, போட்டோ ஷூட் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு கார்கள் வாடகைக்கு கொடுக்கப்படுகிறது. இது தவிர தனி நபர் சுற்றுலா செல்ல விரும்பினாலும் அவர்களுக்கும் கார்களை வாடகைக்கு கொடுக்கிறோம். இதற்கான பர்மிட்களை முறையாக பெற்றுள்ளோம்.” என்றார்.