நேரு தொழில்நுட்பக் கல்லூரி, A+ தரச்சான்று மற்றும் தன்னாட்சி அங்கீகாரம் பெற்றது!

கோவையில் நேரு தொழில்நுட்பக் கல்லூரி, கடந்த 2008-ம் ஆண்டு தொடங்க பெற்று, பொறியியல் துறையில் மிகச் சிறந்த பொறியாளர்களை உருவாக்குவதுடன், அவர்களது பட்டப் படிப்பிற்க்கும், வேலை வாய்ப்பிற்கும் உத்தரவாதம் அளித்து மிகச் சிறந்த பங்களிப்புடன் செயல்பட்டு வருகின்றது.

சமீபத்தில் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அமைப்பால் இக்கல்லூரிக்கு A+ தரச் சான்று முதல் சுற்றிலேயே பெற்று, இக்கல்லூரி சிறப்பிடம் பெற்றுள்ளது . மாணவர்களின் கற்றல், மேம்பாடு, கற்பித்தல், மாணவர்களின் தேர்ச்சி விகிதம், கட்டமைப்பு வசதி, ஆராய்ச்சி துறை, வேலைவாய்ப்பு, தொழில் முனைவோர் ஆவதற்கான வழிகாட்டல் போன்ற அனைத்து விதத்திலும் மாணவ மாணவியர்களின் நலம் சார்ந்த வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறது.

நேரு கல்விக் குழுமத்தின் தலைவர் முனைவர் அட்வகேட் பி. கிருஷ்ணதாஸ் மற்றும் செயலாளர் முனைவர் பி. கிருஷ்ணகுமார் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நேரு இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, பல்கலைக்கழகம் மானிய குழு பரிந்துரைகளின் படி 2023 – 2024 ஆம் கல்வி ஆண்டு முதல் தன்னாட்சி அந்தஸ்து பெற்றுள்ளது.

இதுகுறித்து அவர் கூறுகையில், “கல்லூரி நிர்வாகம், முதல்வர் முனைவர் சிவராஜா, ஆசிரிய பெருமக்கள், பணியாளர்கள் மற்றும் மாணவச் செல்வங்கள் ஆகியோரின் கடின உழைப்பும், உறுதியான நம்பிக்கையும், தான் இந்த வெற்றிக்கு காரணம். மேலும் அனைவரது வாழ்த்துக்களினாலும், கூட்டு முயற்சிகளாலும் இந்த கல்லூரி மாணவர் சமுதாயத்திற்கும் இந்திய பெரும் நாட்டிற்கும் தேவையான பொறியாளர்களை மிகுந்த ஒழுக்கத்துடனும், தொழில்நுட்ப அறிவு திறனோடும் உருவாக்கும் என்ற உறுதியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தருணத்தில் சமுதாயத்திற்கு தேவைப்படும் கட்டிடவியல், விவசாயம், உணவுத்துறை, விமானவியல் துறை மற்றும் சார்ந்த வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறது.

நேரு கல்விக் குழுமத்தின் தலைவர் முனைவர் அட்வகேட் பி. கிருஷ்ணதாஸ் மற்றும் செயலாளர் முனைவர் பி. கிருஷ்ணகுமார் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நேரு இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, பல்கலைக்கழகம் மானிய குழு பரிந்துரைகளின் படி 2023 – 2024 ஆம் கல்வி ஆண்டு முதல் தன்னாட்சி அந்தஸ்து பெற்றுள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில், “கல்லூரி நிர்வாகம், முதல்வர் முனைவர் சிவராஜா, ஆசிரிய பெருமக்கள், பணியாளர்கள் மற்றும் மாணவச் செல்வங்கள் ஆகியோரின் கடின உழைப்பும், உறுதியான நம்பிக்கையும், தான் இந்த வெற்றிக்கு காரணம்.

மேலும் அனைவரது வாழ்த்துக்களினாலும், கூட்டு முயற்சிகளாலும் இந்த கல்லூரி மாணவர் சமுதாயத்திற்கும் இந்திய பெரும் நாட்டிற்கும் தேவையான பொறியாளர்களை மிகுந்த ஒழுக்கத்துடனும், தொழில்நுட்ப அறிவு திறனோடும் உருவாக்கும் என்ற உறுதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த தருணத்தில் சமுதாயத்திற்கு தேவைப்படும் கட்டிடவியல், விவசாயம், உணவுத்துறை, விமானவியல் துறை மற்றும் மென்பொருள் தகவல் தொழில்நுட்பத் துறை ஆகியவற்றில் இக்கல்லூரி சிறப்புடன் செயல்படும் என உறுதி அளிக்கிறது” என்றார்.