நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் புதிய விளம்பரப் பிரசாரத்தை துவங்கிய பிளேயர்ஸ்பாட்!

இந்தியாவின் இணையவழி கேமிங் தளமான பிளேயர்ஸ்பாட் (PlayerzPot), திறன் சார்ந்த விளையாட்டுகளை கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த பிளேயர்ஸ்பாட் தளம் தற்போது, #TalentKiValue என்ற தலைப்பில் புதிய விளம்பரப் பிரச்சாரத்தை துவங்கியுள்ளது.

இதற்கு நடிகை ராஷ்மிகா மந்தனா விளம்பரத் தூதராக நடித்துள்ளார். பிளேயர்ஸ்பாட் தளம் உள்ளரங்க கேமிங் சாம்பியன்களிடம், அவர்களுக்குப் பிடித்த கேம்களை மீண்டும் அறிமுகப்படுத்தி அங்கீகரித்து ஊக்குவிக்கிறது. இந்தப் புதிய விளம்பரப் பிரச்சாரம் பல்வேறு டிஜிட்டல் தளங்கள், ஒ.டி.டி. தளங்களில் ஒளிபரப்பப்பட உள்ளது. இந்த விளம்பரப் பிரச்சாரத்தின் மூலம், பிளேயர்ஸ்பாட் அனைத்து பிரிவு கேமர்கள் மத்தியிலும் பெரும் முன்னேற்றங்களை கண்டு வருகிறது.