கிராப்ட் கவுன்சில் ஆப் தமிழ்நாடு சார்பில் கோவையில் கண்கவர் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

கிராப்ட் கவுன்சில் ஆப் தமிழ்நாடு சார்பில், சிருஷ்ட்டி என்ற பிரத்யேகக் கண்காட்சி கோவையில் இன்று துவங்கியது. வருகிற 22-ம் தேதி வரை கண்காட்சி நடைபெற உள்ளது.

கோவையில் நடைபெறும் கிராப்ட் பஜார் கண்காட்சியில் கண்கவர் ஆடைகளும், கைவினைப் பொருள்களும் இடம்பெற உள்ளன. இது கைவினைக் கலைஞர்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பாலமாக இந்தக்கண்காட்சி விளங்குகிறது. இந்தக் கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட கைவினைக் கலைஞர்களின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அஸ்ஸாம் முதல் கேரளம் வரையுள்ள கைவினைக் கலைஞர்கள் இந்தக் கண்காட்சியில் பங்கேற்றுள்ளனர். குழந்தைகளுக்கான ஆடைகள், ஆபரணங்கள், கிப்ட் பொருள்கள், வீட்டு அலங்காரப் பொருள்கள் மேலும் அன்றாட வாழ்வுக்கு தேவையான பொருள்கள் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இந்தக் கண்காட்சி மூலமாக பெறப்படும் நிதியானது கைவினை கலைஞர்களின் வாழ்க்கைக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். இந்த கண்காட்சியை கிராப் கவுன்சில் ஆப் தமிழ்நாடு தலைவர் ஜெய்ஸ்ரீ ரவி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். உடன் செயலாளர் சுஜினிபாலு, கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் லட்சுமி ராமச்சந்திரன், வெங்கடலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.