நடுவானில் விமான பயணிகளுக்கு மூக்கு – காதில் ரத்தக்கசிவு!

ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணித்த பல பயணிகளுக்கு திடீர் என்று ஒரே சமயத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தால் விமானம் பாதியில் தரையிறக்கப்பட்டு இருக்கிறது. இது ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஆகும். மும்பையில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி இந்த விமானம் சென்றுள்ளது. இன்று காலை இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில் மொத்தம் 170 பேர் பயணம் செய்து இருக்கிறார்கள். இதில் 30 பயணிகளுக்கு இப்படி உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது. இவர்கள் எல்லோருக்கும் முதலில் தலைவலி ஏற்பட்டு இருக்கிறது. அதன்பின் இவர்கள் வாந்தி எடுத்து இருக்கிறார்கள். சில நேரத்தில் சிலருக்கு ரத்தம் வந்துள்ளது. மூக்கு மற்றும் காதுகளில் ரத்தம் வந்துள்ளது. அதன்பின் ஒவ்வொருவராக சிலருக்கு மூக்கு மற்றும் காதுகளில் இருந்து ரத்தம் வந்து இருக்கிறது. மொத்தமாக 30 பேருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

விமானம் மேலே பறக்க பறக்க அதற்கு உட்புறம் உள்ள காற்று அழுத்தமும், வெளியே இருக்கும் அழுத்தமும் மாறிக்கொண்டே வரும். இதை சரியாக சமநிலைப்படுத்தி இயல்பில் வைத்திருக்க வேண்டும். ஆனால், இந்த அழுத்த மாற்றத்தை சரி செய்யாமல் புறப்பட்டு இருக்கிறார்கள் விமான பணியாளர்கள். இதனால் இந்த பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் இந்த விமானம் இன்று வெகுவேகமாக மும்பையில் மீண்டும் தரையிறக்கப்பட்டது. பயணிகள் எல்லோரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து விசாரணையும் நடந்து வருகிறது.