பாரதிய வித்யா பவன் சார்பில் தமிழறிஞர்களுக்கு விருது வழங்கும் விழா

படைப்பிலக்கியம், ஆராய்ச்சி ஆகியவை மூலம் தமிழுக்கு மிகச்சிறந்த சேவை செய்பவர்களையும் தமிழ் வளர்ச்சிக்கு பனி செய்பவர்களையும் கடந்த சில ஆண்டுகளாக பாரதிய வித்யா பவனத்தின் கோவை மையம் தமிழ் மாமணி, தமிழ் பணிச்செம்மல் ஆகிய விருதுகளை அளித்து கெளரவித்து வருகிறது. இந்நிலையில் இந்த வருடம் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பாரதிய வித்யா பவனத்தின் கோவை மையத்தின் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் , தலைமையில் முனைவர் ரத்னம் அவர்களுக்கு தமிழ் மாமணி விருதும், டாக்டர் ஜே.ஜி. சண்முகநாதன் அவர்களுக்கு தமிழ்பணிச்செம்மல் விருதும் வழங்கப்பட்டது. விருது பெற்ற ரத்னம், பல்வேறு அறிய நூல்களை படைத்தவர். இவரது அயராத உழைப்பின் பயனாக உருவான தென்னிந்த குலங்களும் குடிகளும் என்னும் மொழிபெயர்ப்பு நோல் தமிழ் பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய ரத்னம், தமிழ் வழிக்கல்வியின் மேன்மையையும் தமிழ் குழந்தைகளுக்கு தமிழ் பெயர்களை வைக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார். மேலும் விருது பெற்ற சண்முகநாதன் , சிறு வயது முதலே பாரதி பாடல்களில் தோய்ந்து பாரதி புகழ் பரப்புவதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டவர். தன வாழ்க்கையை செப்பனிட்டு சிறப்பின் சிகரத்தில் எற்றிவர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ஆசிரியர்களும் , மருத்துவர்களும் மாணவர்களும் , பொதுமக்களும் கலந்து கொண்டனர்.