ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

மலேசியா நாட்டில் உள்ள ஐ.என்.டி.ஐ. சர்வதேசப் பல்கலைக்கழகத்துடன், கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டது.

இவ்வொப்பந்தத்தில் எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமி நாராயணசுவாமி,  மலேசியா ஐ.என்.டி.ஐ. பல்கலைக்கழகத் துணை வேந்தர் ஜோசப் லீ ஆகியோர் கையொப்பமிட்டு, புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனர்.

இந்த ஐந்தாண்டு ஒப்பந்தத்தின் மூலம், ‘இவ்விரு கல்வி நிறுவனங்களின் ஆசிரியர் மற்றும் மாணவர் பரிமாற்ற அடிப்படையில், இரு கல்வி நிறுவனங்களிலும் கற்றல், கற்பித்தல் முறைகளை நேரில் அறிதல், பாடத்திட்டங்களைப் பரிமாறிக் கொள்ளுதல், இரு கல்வி நிறுவனங்களிலும் ஆராய்ச்சித் திட்டங்களை மேம்படுத்துதல் மற்றும் நடைமுறைப்படு்த்துதல், ஆராய்ச்சித் திட்டங்களை வெளியிடுதல், இரு கல்வி நிறுவனங்களும் இணைந்து பயிலரங்குகள், கருத்தரங்குகள், ஆய்வு மாநாடுகள் நடத்துதல், சுற்றுலா அனுபவங்களைப் பகிர்ந்துக் கொள்ளுதல்’ ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

இதன் தொடர்ச்சியாக ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் பி.எல்.சிவக்குமார், ஐ.என்.டி.ஐ. சர்வதேசப் பல்கலைக்கழக சுகாதாரம் மற்றும் உயிரி அறிவியல் துறை டீன் எஸ்.கீதா சுப்பிரமணியம் ஆகியோர் அவ்வொப்பந்தத்தைப் பரிமாறிக் கொண்டனர்.