புரிந்துணர்வு ஒப்பந்தம்

வீஸ்கில் (WiSkill) நிறுவனம், தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு க்லவுட் கம்பியூட்டிங் (Cloud Computing) திறன் கூட்டாளராக சிடிஏசி CDAC உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

WiSkill – World Intended skill என்பது ஒரு திறன் மேலாண்மை மற்றும் திறன் வளர் நிறுவனமாகும். இது தொழில் மற்றும் கல்வியாளர்களுக்கு இடையே உள்ள இடைவெளியை நிரப்புகிறது. எங்கள் நிறுவனம், ஏற்கனவே ORACLE கார்ப்பரேஷனுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது என்பது, நிறுவனத்தின் மைல்கற்களில் ஒன்றாகும். மேலும் மைக்ரோசாஃப்ட் (Microsoft) மற்றும், ஏ.டபிள்யு.எஸ் (AWS) உடன் இணைக்கும் செயல்பாட்டில் உள்ளது.

இந்த க்லவுட் கம்பியூட்டிங் படிப்பு, அந்த துறையில் மனிதவளத்தை உருவாக்கும் தொலைநோக்கு பார்வையுடன் வழங்கப்படுகிறது, இன்றைய நிலை படி, அடுத்த இரண்டு ஆண்டுகளில் உலகை ஆழும் வல்லமை பெற்றதாக க்லவுட் திகளும். இந்த க்லவுட் கம்பியூட்டிங் படிப்பு, பாடநெறி அனுபவமும், ஆய்வக வசதியும் கொண்ட தொழில் வல்லுநர்களால் வழங்கப்படுகிறது. மேலும், நிறுவனங்கள் தங்கள் பயிற்சிக்காக, சிடிஏசி ஆதரவுடன், ஆய்வக வசதி அமைத்துதரவும் வீஸ்கில் துணைபுரிகிறது. மேலும், இந்த க்லவுட் கம்பியூட்டிங் படிப்பு, மானிய விலையில் வழங்கப்படுகிறது. மாணவர்கள் இப்படிப்பினை வெற்றிகரமாக முடிக்கும் நிலையில், பாடநெறி கட்டணத்தில் 50% மாணவர்களுக்கு நேரடியாக திருப்பித் தரப்படும். மேலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளைப் பெற்றுத்தரவும் வீஸ்கில் துணைபுரிகிறது.